பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்து, காலாண்டு, அரையாண்டு தேர்வு
அடிப்படையில், தேர்ச்சியை முடிவு செய்ய வேண்டும் என, கோரிக்கை
எழுந்துள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வு, ஏற்கனவே முடிந்து விட்டது. பிளஸ் 1ல் பெரும்பாலான
பாடங்களுக்கு, தேர்வுகள் முடிந்து விட்டன. ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு
தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்புக்கு, நேற்று பொது
தேர்வு துவங்குவதாக இருந்தது.
ஏப்., 14 வரை ஊரடங்கு உள்ளதால், அதன் பிறகும் தேர்வை நடத்த முடியுமா என்ற,
கேள்வி எழுந்துள்ளது. எனவே, பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்து,
காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில், தேர்ச்சி
வழங்கலாம் என, பல தரப்பிலும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.