நாம் தினமும் பல வகையான சமையல்கலை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த
பதிவில் சத்தான மிளகு குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மிளகு - 25 கிராம்
- சீரகம் - 3 தேக்கரண்டி
- தனியா - 2 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 2
- புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
- பெருங்காயம் - சிறு துண்டு
- கறிவேப்பிலை - 5 கொத்து
- நல்லெண்ணெய் - கால் கப்
- கடுகு - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் நான்கு தேக்கரண்டி எண்ணெயில், பெருங்காயம், மிளகு, சீரகம், தனியா,
மிளகாய் வற்றல் ஆகியவற்றை வரிசையாக சிவக்க வறுக்க வேண்டும். பின்
கருவேப்பிலையை போட்டு வதக்க வேண்டும். இவை எல்லாவற்றுடன் புளி, தேவையான
உப்பு சேர்த்து மிக்சியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்க
வேண்டும்.
வாணலியில் மீதியுள்ள எண்ணெயை விட்டு, அதில் கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.
வெடித்ததும் அரைத்த கலவையை விட்டு கிளற வேண்டும். இப்பொது சுவையான மிளகு
குழம்பு தயார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...