நாம்மில் அனைவருமே காலை மற்றும் மாலையில் தேநீர் வைத்து குடிப்பது வழக்கம்.
அந்த வகையில், தற்போது இந்த பதிவில் சுவையான எலுமிச்சை டீ தயாரிப்பது
எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- தண்ணீர் - கால் லிட்டர்
- எலுமிச்சை சாறு - இரண்டு டீஸ்பூன்
- பிளாக் டீ தூள் - 1 டீஸ்பூன்
- தேன் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி
கொதிக்க விட வேண்டும். அதனுடன் டீ தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து
எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு டம்ளரில் தேவையான அளவு தேன் சேர்த்து கொள்ள வேண்டும். பின்
அவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு சூடான
டீயை வடிகட்டி, தேன் எலுமிச்சை சாறு கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கினால்
சூடான எலுமிச்சை டீ தயார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...