Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறியும் வழிமுறை.
தினம் ஒரு தகவல்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறியும் வழிமுறை.
‘உணவே மருந்து’ என்பது நம் முன்னோர்களின் கூற்று, உணவு என்பது நம் அன்றாட அடிப்படை தேவைகளில் ஒன்றாகும். எனவே சரியான சுத்தமான, கலப்படமற்ற உணவை நாம் உட்கொள்ள வேண்டும். குடும்ப வருமானத்தில் பெரும் பகுதியை உணவுக்கு செலவிட வேண்டியுள்ளது.
எனவே நாம் குறைந்த செலவில் நிறைய உணவு பொருட்கள் வாங்க விரும்புகிறோம்.தற்போது அனைத்து பொருட்களிலும் கலப்படம் செய்யப்படுகிறது. கலப்படம் செய்யும் உணவு பொருட்களால் பல்வேறு நோய்களுக்கு மனிதர்கள் ஆளாகின்றனர். அதாவது வயிற்றுகோளாறு, தலைச்சுற்றல், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, சிறுநீரக கோளாறு, அல்சர், மூச்சுக்குழல் நோய்கள், சுவாச கோளாறு, இருதய கோளாறு போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் உண்டாகின்றன. தற்போதைய சூழலில் அனைத்து வயது வரம்பினரும் (குழந்தை முதல் முதியோர்) புற்றுநோய் தாக்கத்துக்கு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உணவு பொருட்களின் கலப்படம் பெரும் பங்கு வகிக்கிறது.
2025ம் ஆண்டில் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் 67 சதவீத மக்கள் பாதிக்கப்படுவர் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒவ்வொரு உணவு பொருட்களிலும் அதிலிருந்து எளிதில் பிரித்தெடுக்க முடியாதவாறு அதேபோன்ற ஒரு பொருளை கலப்படம் செய்கின்றனர். இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை கண்டறிவதற்கு சில வழிமுறைகள் உள்ளன.பருப்பு வகைகளில் கலப்படம் செய்யப்படும் லெட்க்ரோமேட்டை கண்டறிய பருப்புடன் 5 மி.லி. அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்த்தால் ரோஸ் நிறமாக மாறும். சமையல் எண்ணெயில்
தடை செய்யப்பட்ட வண்ணங்கள் இருப்பதை கண்டறிய கலப்பட சமையல் எண்ணெயுடன் 5 மி.லி. அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்த்து குலுக்கினால் 5 நிமிடம் கழித்து நிறம் மட்டும் மேலே படிந்து விடும்.
டீத்தூளில் இரும்புத்தூள், செயற்கை நிற மூட்டிகள் போன்றவை சேர்க்கப்படுகிறது. இதை கண்டறிய ஈர வெள்ளை பில்டர் பேப்பர் மீது கலப்படம் செய்யப்பட்ட டீத்தூளை பரப்பினால் பேப்பர் நிறமுள்ளதாக மாறி விடும். இரும்புத்தூளை காந்தம் கொண்டு கண்டறியலாம். காபி தூளில் உள்ள புளியங்கொட்டை தூள்களை கண்டறிய குளிர்ந்த நீரில் கலப்படம் செய்யப்பட்ட காபித்தூளை போட்டு குலுக்கினால் கலப்பட தூள் அடியில் படிந்துவிடும்.
மிளகாய் தூளில் வண்ண பொடிகள், செங்கல் தூள், மரத்தூள் ஆகியவற்றை கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதை கண்டறிய கலப்படம் செய்யப்பட்ட மிளகாய்த்தூளை ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டால் மரத்தூள் மிதக்கும். செங்கல்தூள் மிளகாய்த்தூளை விட வேகமாக அடியில் படியும். மல்லித்தூளில் முக்கிய கலப்பட பொருளாவது குதிரை சாணத்தூளாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் மல்லித்தூளை போட்டால் சாணத்தூள் மிதக்கும்.
பாலில் உடலுக்கு தீமை தரும் ஸ்டார்ச், யூரியா, சோப் பவுடர் போன்றவற்றை வென்மைக்கும், நுரை வருவதற்கும் கலப்படம் செய்கின்றனர். கீழ்வரும் முறைகளால் இதை கண்டுபிடிக்கலாம். ஸ்டார்ச் – கலப்படம் செய்யப்பட்ட பாலுடன் சில துளி அயோடின் சேர்த்தால் நீல நிறமாக மாறிவிடும். யூரியா சேர்க்கப்பட்ட
பாலுடன் அரை தேக்கரண்டி சோயாபீன் பவுடரை சேர்த்து நன்றாக குலுக்கி அப்படியே 5 நிமிடம் வைத்து விட வேண்டும். பிறகு சிவப்பு நிற லிட்மஸ் தாளை அதனுள் மூழ்கி எடுத்தால் நீல நிறமாக மாறுவதை கொண்டு யூரியா கலப்படத்தை உறுதி செய்யலாம்.சோப் பவுடர் – கலப்படம் செய்யப்பட்ட பாலுடன் சமஅளவு தண்ணீர் கொண்டு குலுக்கினால் சோப்பு நுரை வருவதை கொண்டு கலப்படத்தை கண்டறியலாம். வெண்ணெய் மற்றும் நெய்யில் மசித்த உருளை கிழங்கு, வனஸ்பதி ஆகியவற்றை கலப்படம் செய்கின்றனர்.
சிறிதளவு உருக்கிய நெய்யுடன் 10 மி.லி. ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சேர்த்து நன்றாக குலுக்கவும். வனஸ்பதி கலந்திருந்தால் 10 நிமிடம் கழித்து சிவப்பு நிறமாக மாறிவிடும். மிளகில் காய்ந்த பப்பாளி விதைகள் எடைக்காக கலப்படம் செய்யப்படுகிறது.
இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட மிளகு சிறிதளவை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்தால் பப்பாளி விதைகள்
நீரில் மிதக்கும். சீரகத்தில் கல், புல் விதை, நிலக்கரி தூள் முதலியவை கலப்படம் செய்யப்படுகிறது. எளிய முறையில் கண்டறிய கலப்படம் செய்த சீரகத்தை கைகளில் வைத்து தேய்த்தால்; விரல்களில் கருமை படியும். பெருங்காயத்தில் மண், கல், மைதா ஆகியவற்றை சேர்க்கின்றனர். கலப்படம் செய்யப்பட்ட பெருங்காய தூளுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக குலுக்கி படியவிட்டால் கலப்பட பொருட்கள் அடியில் படியும். கலப்படமற்ற பெருங்காயத்தை எரிய செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்
. கலப்பட பெருங்காயம் அவ்வாறு எரியாது. இதுபோன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவில் கலப்படம் இல்லாமல் உள்ளதா என நாம் உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் சோபனா தெரிவித்துள்ளார்.
மிளகாய் தூளில் வண்ண பொடிகள், செங்கல் தூள், மரத்தூள் ஆகியவற்றை கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதை கண்டறிய கலப்படம் செய்யப்பட்ட மிளகாய்த்தூளை ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டால் மரத்தூள் மிதக்கும். செங்கல்தூள் மிளகாய்த்தூளை விட வேகமாக அடியில் படியும்.
மல்லித்தூளில் முக்கிய கலப்பட பொருளாவது குதிரை சாணத்தூளாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் மல்லித்தூளை போட்டால் சாணத்தூள் மிதக்கும்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









