தைராய்டு கழுத்தின் அடிப்பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பியானது, மூன்று ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அவை, டி3, டி4 , கால்சிடோனின் போன்றவையாகும். வளர்சிதை மாற்றம், தூக்கம், இதயத் துடிப்பு, மூளை வளர்ச்சி போன்றவற்றை இந்த ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. சில நேரங்களில் தைராய்டு சுரப்பி, குறைவான ஹார்மோனை சுரப்பதால் தைராய்டு சுரப்பு குறைபாடு என்ற ஹைப்போ தைராய்டு ஏற்படுகிறது. எடை அதிகரிப்பு, மன அழுத்தம், மலச்சிக்கல், சோர்வு, உயர் இரத்த கொலஸ்ட்ரால், குறைந்த இதயத் துடிப்பு, போன்றவை ஹைப்போ தைராய்டுடன் தொடர்புடையது. க்ளுடேன் சகிப்பு தன்மை இன்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுற்றுச் சூழல் நச்சு போன்றவை தைராய்டு ஹர்மொனின் குறைவான சுரப்பிற்கு காரணமாக உள்ளன. தைராய்டு பாதிப்பால் உடலில் அதிகமான நீர் தேக்கம் உண்டாகிறது. இவை கொழுப்பு அல்ல. இத்தகைய அதிக நீர் தேக்கத்தால் உடல் பருமனாக இருப்பது போல் தோற்றமளிக்கிறது. தைராய்டு சமச்சீரின்மை காரணமாக உடலின் 5-10 பவுண்ட் வரை எடை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. தைராய்டு சமச்சீரின்மைக்கு என்ன சிகிச்சை கொடுக்கலாம் ? தைராய்டு ஊக்குவிக்கும் ஹார்மோன்களை டி3 மற்றும் டி4 ஆகியவற்றுடன் சேர்த்து பரிசோதனை செய்து மருத்துவரிடன் அறிக்கை பெறவும் . பச்சையாக காய்கறிகளை உட்கொள்ளாமல், நன்கு வேக வைத்த காய்கறிகளை உட்கொள்ளவும். ஐயோடின் சேர்க்கப்பட்ட உப்பைச் சேர்க்கவும். ஜிங்க் சத்து அதிகம் உள்ள சிப்பிகள், பூசணி விதை போன்றவற்றை அதிகம் உட்கொள்ளவும். மீன் எண்ணெய் மற்றும் வைட்டமின் டி சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரை இருந்தால், தைராய்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். இன்சுலின் கணையத்தில் சுரக்கும் ஹார்மோன் இன்சுலின் ஆகும். இவை அணுக்களுக்குள் க்ளுகோசை எடுத்துச் செல்ல உதவுகின்றன. இவை ஆற்றலாக அல்லது கொழுப்பாக மாற்றப்படுகின்றன. இது, இரத்தத்தில் க்ளுகோஸ் அளவைப் பராமரிக்க உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது, மது அருந்துவது, செயற்கை இனிப்புகள் சேர்த்த உணவை எடுத்துக் கொள்வது, ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்வது, (அதிகமான பழங்களை உட்கொள்வதும் ) போன்றவை இன்சுலின் தடையை உண்டாக்கும். இந்நிலையில், தசை அணுக்களால், க்ளுகோஸ் பிணைந்த இன்சுலினை அடையாளம் காண முடியாமல், இரத்தத்தில் க்ளுகோஸ் தங்கி விடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது முடிவில், டைப் 2 நீரிழிவாகவும், எடை அதிகரிப்பிற்கும் காரணமாகிறது இன்சுலின் பாதிப்பை எப்படி குறைக்கலாம்? இரத்த சர்க்கரை அளவைப் பரிசோத்தித்து, மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். ஒரு வாரத்தில் 4 மணி நேரம் உடற் பயிற்சி செய்யுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பிடுவது , மது அருந்துவது , பின்னிரவு நேரத்திற்கு பிறகு சிற்றுண்டி எடுத்துக் கொள்ளுவது , செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் அருந்துவது, போன்றவற்றைத் தவிர்க்கலாம். பச்சை இலையுடைய காய்கறிகள் மற்றும் ஒவ்வொரு பருவத்திலும் கிடைக்கும் காய்கறிகளை ஒரு நாளைக்கு 4-5 வேளை மற்றும் பழங்களை 3 வேளை எடுத்துக் கொள்ளலாம். கொழுப்பு அதிகம் உள்ள மீன்கள், நட்ஸ், ஆலிவ் எண்ணெய், ஆழி விதைகள், போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஒமேகா கொழுப்பு அமிலம் அளவு அதிகரிக்கிறது. குறைந்த கலோரி உணவுகளாக அதே சமயம் ஊட்டச்சத்து மிக்க உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 2000-2200 கலோரிகள் வரை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் வரை தண்ணீர் பருகலாம். லெப்டின் சாதாரண சூழ்நிலையில், உங்கள் வயிறு நிறைவதையும், இதற்கு மேல் சாப்பிட முடியாது என்பதை உணர்த்தவும் உதவும் ஒரு அறிகுறி லெப்டின் ஹார்மோன் சுரப்பது ஆகும். இனிப்புகள், சாக்லேட், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால், அதிக அளவு பிருக்டோஸ் உற்பத்தியாகி, அவை கொழுப்பாக மாறி, கல்லீரல், வயிறு மற்றும் உடலின் மற்ற பாகங்களில் தேங்கி விடுகிறது. இப்போது கொழுப்பு அணுக்கள் லெப்டின் ஹார்மோனை சுரக்கின்றன. பிருக்டோஸ் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து, அதிக லெப்டினைச் சுரக்கின்றன. இதனால், லெப்டின் சுரப்பதை உணரும் திறன் உடலில் குறைகிறது. இதனைத் தொடர்ந்து , சாப்பிடுவதை நிறுத்துவதற்கான சிக்னல் மூளைக்கு செல்வது நிறுத்தப்படுகிறது. இதனால் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. லெப்டின் அளவைக் குறைப்பது எப்படி ? உடலுக்கு போதுமான அளவு ஓய்வு தேவை. தூக்க குறைபாட்டால், உடலில் லெப்டின் அளவில் மாற்றம் ஏற்பட்டு, உணவு எடுத்துக் கொள்வதை நிறுத்தும் சிக்னல் மூளைக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது. ஆகவே, ஒரு நாளில் 7-8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடவும். சர்க்கரை சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள். ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் பழங்களை உண்ண வேண்டாம். பச்சை இலையுடைய காய்கறிகளை அதிகம் உண்ணலாம், ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகளை உண்ணலாம். உடலை நீர்ச்சத்தோடு வைத்துக் கொள்ளுங்கள், நீர்சத்து குறைபாடும் உங்களுக்கு பசியைத் தோற்றுவிக்கலாம். க்ரேலின் இந்த ஹார்மோன் பிரபலமாக 'பசி ஹார்மோன்' என்று அழைக்கப்படுகிறது. க்ரேலின், பசியின்மையைத் தூண்டுகிறது மற்றும் கொழுப்பு சேமிப்பை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் வயிற்றில் சுரக்கிறது. சிறு குடல், மூளை மற்றும் கணையத்திலும் ஒரு சிறு அளவு க்ரேலின் சுரக்கப்படுகிறது. இரத்தத்தில் இருக்கும் அதிக அளவு க்ரேலின் , உடல் எடையை அதிகரிக்கிறது. பருமனான மக்கள் இந்த ஹார்மோனுக்கு மிகுந்த உணர்திறன் கொண்டுள்ளனர். கடினமான உணவுக் கட்டுப்பாடு மற்றும் விரதம் இருந்தால் க்ரேலின் அளவு அதிகரிக்கும். க்ரேலின் அளவைக் குறைப்பதற்கான வழிகள் என்ன ? 2-3 மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு உட்கொள்ளவும். ஒரு நாளைக்கு 6 முறை சாப்பிடவும். பிரெஷ் பழங்கள், காய்கறிகள், புரதச் சத்து , நார்ச்சத்து மற்றும் ஆரோக்கிய கொழுப்பு கொண்ட உணவுபொருட்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். சாப்பிடுவதற்கு 20 நிமிடங்கள் முன் 1 1/2 கப் தண்ணீர் பருகவும். இவற்றை பின்பற்றியும் பிரச்சனை தொடர்ந்தால் , மருத்துவரை அணுகவும். உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும். ஈஸ்ட்ரோஜென் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும், உடை எடையில் மாற்றம் உண்டாகி எடை அதிகரிக்கும். ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிக்கும்போது உடல் எடை அதிகரிப்பதைப் பற்றி இப்போது காண்போம். கருப்பை அணுக்கள் இந்த ஹார்மோனை அதிக உற்பத்தி செய்வதால் அல்லது, ஈஸ்ட்ரோஜென் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிக்கிறது. இன்றைய நாட்களில் விலங்குகளுக்கு அதிக அளவில் ஸ்டீராய்டு, ஹார்மோன், நுண்ணுயிர் எதிர்ப்பி போன்றவை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றன. இத்தகைய விலங்குகளின் இறைச்சியை நாம் உண்பதால் இவை உடலில் ஈஸ்ட்ரோஜன் போல் செயலாற்றுகின்றன. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், உங்கள் உடல் சரியான அளவு இன்சுலின் சுரந்து உங்கள் இரத்த சர்க்கரை அளவு சரியாக இருக்கும். அதுவே, உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிக்கும்போது, இன்சுலின் சுரக்கும் அணுக்கள் அழுத்தப்படுகிறது. இதனால் இன்சுலின் சுரப்பது தடைபட்டு, க்ளுகோஸ் அளவு இரத்தத்தில் அதிகரிக்கிறது . இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. மெனோபாஸ் காலத்திற்கு முந்தைய பருவத்தில் உள்ள பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் குறைபாடு தோன்றும். இதனால் அவர்கள் கருவுறுதல் நிறுத்தப்படும். இதனால் ஈஸ்ட்ரோஜென் அளவு மேலும் குறைகிறது. எல்லா கருப்பை அணுக்களும் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி செய்வதால் , அவை நிறுத்தப்படும்போது , மேலும் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைகிறது. ஆகவே ஈஸ்ட்ரோஜென் அளவை சீராக்க, இதனை சுரக்கும் மற்ற அணுக்களை உடல் தேடுகிறது. அத்தகைய ஒரு மூலம் தான் கொழுப்பு செல்கள் ஆகும்.