கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ‘பணப்புழக்கத்தை அதிகரிக்க, நிதிச்சுமையை குறைக்க பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும்.
ரூ.50 ஆயிரம் கோடிக்கு வங்கிகளிடம் இருந்து கடன் பத்திரங்கள் பெறப்படும்.
நபர்டு, சிட்பி உள்ளிட்ட வங்கிகளின் மூலமாக ரூ. 50 ஆயிரம் கோடிக்கு கடன் உதவி வழங்க வழி செய்யப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பான பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், ‘ரிசர்வ் வங்கியின் இன்றைய அறிவிப்பு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் மற்றும் கடன் வழங்குவதை அதிகப்படுத்தும்.
ரிசர்வ் இந்த முயற்சிகள் சிறு, குறு தொழில்களுக்கு, விவசாயிகளுக்கு, ஏழைகளுக்கு உதவும். மேலும், மாநிலங்கள் கடன் வாங்கும் அளவை அதிகரிக்கவும் உதவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.