பிரபலமான "Zoom" ஆப் பாதுகாப்பானது அல்ல" - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 17 April 2020

பிரபலமான "Zoom" ஆப் பாதுகாப்பானது அல்ல" - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை:


இணையதளம் மூலம் வீடியோ கான்பிரன்சிங்கில் பேச Zoom ஆப் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் பணிபுரியும் பலரும், சாஃட்வேர் பொறியாளர்களும் Zoom ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

 ஆன்லைனில் வீடியோ மூலம் பேசவும், கருத்தரங்கு  உள்ளிட்டவற்றை பதிவு செய்யவும் Zoom ஆப் பயன்படுத்தபடுகிறது.

மேலும்
விரிவான திட்ட அறிக்கைகளை இருதரப்பினரும் ஆன்லைனில் பரிமாறி கொள்ளவும் இந்த ஆப் உதவுகிறது.

 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு
 Zoom ஆப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.    

கொரோனா வைரஸ்  பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பல கோடி பேர் வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.

 அவர்களில் 20 கோடிக்கும் மேற்பட்டோர்  Zoom ஆப்பை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்  Zoom ஆப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்ற கருத்து கடந்த 2018 ஆண்டு முதல் நிலவி வருகிறது.

முக்கிய நிறுவன அதிகாரிகள் பங்கேற்கும் வீடியோ கான்பிரன்சிங்கின் போது யார் வேண்டுமானாலும் Zoom ஆப் மூலம் அத்துமீறி நுழைய முடியும் என்று
இணையதள வல்லுனர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் போது சிலர் Zoom ஆப் மூலம் ஊடுருவி ஆபாச படங்களை அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.

 இந்நிலையில் இந்தியாவில் Zoom ஆப்பை  அரசு வீடியோ கான்பிரன்ஸ் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த  தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் Zoom ஆப்பை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Zoom ஆப் 
 பாதுகாப்பானது அல்ல என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதை பயன்படுத்த யாராவது விரும்பினால் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவும் என்றும் எச்சரித்துள்ளது.

அண்மைக்காலமாக அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள்  கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட இந்த ஆப்பை பயன்படுத்துகிறார்கள் எனெபது குறிப்பிடத் தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H