நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர்
மோடி அறிவித்தார். ஏப்ரல் 20ம் தேதி வரை தீவிர கட்டுப்பாடுகள்
அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில
தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ஊரடங்கு
நீட்டிப்பு குறித்து இன்று விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்
என்றும் மோடி கூறியிருந்தார்.அதன்படி ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய
நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதில், ஏப்ரல் 20ந்தேதி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில
அரசுகளே முடிவு செய்யலாம். ஆனால் அவை ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க
வேண்டும்.