
ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் தனது பழைய சலுகைகளை மாற்றியமைத்து புதிய
சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில், தற்சமயம் ரூ. 401 விலையில்
புதிய சலுகையை ஏர்டெல் அறிவித்து இருக்கிறது.
ஏர்டெல்
ரூ. 401 சலுகையில் டேட்டாவுடன், டிஸ்னி பிளஸ் மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி
சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 3 ஜிபி
டேட்டா, ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி
சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது.

இந்த
சலுகைக்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். புதிய ஏர்டெல் சலுகை ஏர்டெல்
அதிகாரப்பூர்வ வலைதளம், ஏர்டெல் தேங்ஸ் ஆப் மற்றும் ஆஃப்லைன் ரீசார்ஜ்
மையங்களில் கிடைக்கிறது.
டிஸ்னி பிளஸ் மற்றும்
ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவில் டிஸ்னி பிளஸ் தரவுகளை பல்வேறு பிராந்திய
மொழிகளில் கண்டுகளிக்க முடியும். இதில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்,
வரம்பற்ற நேரலை விளையாட்டு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் பல்வேறு
இதர தரவுகள் வழங்கப்படுகின்றன.