பெட்ரோல் எஞ்சினில் டீசல் அல்லது மண்ணெண்ணெயை நிரப்பினால் வாகனம் ஓடும். இதிலுள்ள மின்பொறி சாதனத்தால் கலவை எரிந்து விசை உண்டாகும். ஆனால் இது திறமிக்கதாக இருக்காது, ஏராளமாக புகை படிந்து விரைவில் எஞ்சின் கெட்டுவிடும்.
டீசல் எஞ்சினில் பெட்ரோலை நிரப்பினால் வாகனம் ஓடும். டீசலை விட பெட்ரோல் குறைந்த வெப்பநிலையில் தீப்பற்றக் கூடியதாகையால் வாகனம் ஓடும். ஆனால் இதுவும் திறமிக்கதாக இராது.









