உள்மன ஆற்றல்
ஒரு விஞ்ஞானி.. அவர் பெயர் ஹோ.. ஒரு ஊசியை கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவர் நோக்கம்.. அதற்காக அவர் ரொம்ப காலம் ஆராய்ச்சி செய்தார்.. இருந்தாலும், அதை கண்டுபிடிப்பது அவருக்கு இயலாத காரியமாகவே இருந்து வந்தது.. அப்படி என்ன? அபூர்வமான ஊசி அது? வேறொன்றுமில்லை இன்றைக்கு தையல் இயந்திரங்களில் உபயோகப்படுத்துகிறார்கள் அல்லவா அந்த ஊசி தான்...
இந்த நேரத்தில் மலை சாதியினர், அவரைச் சுற்றி.. சுற்றி.. வந்து பயங்கரமாக முறைத்துக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள்.. தன்னை சுற்றி ஆடிக் கொண்டு வருகிற அவர்களை மிகவும் அச்சத்தோடு கவனிக்கிறார்.. நேரம் ஆக, ஆக தன்னுடைய இறுதி நேரம் நெருங்குவதை உணர்கிறார்.. மிகவும் நெருக்கடியான நிலைமையில் தன்னைச்சுற்றி ஆடுகிற அவர்களை கவனிக்கிறார்.. அவர்கள் கைகளில் ஈட்டி மாதிரி ஒரு ஆயுதம் வைத்திருக்கிறார்கள்.. அந்த ஆயுதத்தை இவர் கண்ணுக்கு நேராக குத்துவதுபோல் கொண்டுவருகிறார்கள்.. அவர் அதைப் பார்க்கிறார் அந்த ஆயுதத்தின் கூரான முனையை இவர் கூர்ந்து கவனிக்கிறார்.. அந்தக் கூரான முனையில் ஒரு சின்ன துவாரம் தெரிகிறது உடனே அவருக்குள் பளிச்சென்று ஒரு ஐடியா உதயமாகிறது.. இதைத்தானே நான் இவ்வளவு காலமும் தேடிக்கொண்டிருந்தேன்.. கூரான முனையில் ஒரு சின்ன துவாரத்தை போட்டு விட்டால்.. அது மூலமா நூலைச் செலுத்தி, மறுமுனையை இயந்திரத்தில் வைத்து விடலாமே.. தையல் இயந்திரத்துக்கான ஊசி இதுதான் என்று நினைத்தார்.. திடீரென்று தூக்கம் கலைந்தது.. உடனே தன் தலைமாட்டில் இருந்த குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொண்டார்.. அதன் பிறகு அந்த ஊசியையும் அவர் தான் செய்து முடித்தார்.. இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம்..? ஆனால் இது சாத்தியம் தான்.. _விழித்துக் கொண்டிருக்கிற போது நமக்கு ஏற்படுகிற சில பிரச்சினைகளுக்கு கனவில் விடை கிடைப்பது உண்டு.









