முக ஸ்டாலின்
சென்னை:
தமிழகத்தில்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை
தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
அமைச்சர்
செங்கோட்டையன், கொரோனா பரவல் குறையாததால் மாணவர்களின் நலன் கருதி 10-ம்
வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இன்று
தெரிவித்தார்.
ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை 10-ம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் காலையில் நடைபெறும். பொதுத்தேர்வின் போது ஒரு தேர்வு
அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று
கூறினார்.
இந்நிலையில் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
மாணவரும், பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டதை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை.
ஜூன்
1-ந்தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர்
ஏற்கனவே செங்கோட்டையன் தெரிவித்த இருந்தார். தன்னிச்சையாக அறிவித்த 10ம்
வகுப்பு பொதுத் தேர்வு எதிர்ப்பு பலமானதும் தள்ளி வைத்தார்கள்.
தற்போது
, ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று கூறியிருக்கிறார். அதற்குள்
நிலைமை சீராகிவிடுமா? என தமிழக அரசுக்கு முக ஸ்டாலின் கேள்வி
எழுப்பியுள்ளார்.







