இந்த தேர்வுகளை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. வரும், 17ம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளதால், அதன்பின் ஏற்படும் நிலைமைக்கு ஏற்ப, ஜூனில் தேர்வை நடத்த, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2வுக்கு மட்டும், மார்ச், 24ல் நடந்த தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு, ஜூன் முதல் வாரத்திலேயே தேர்வை நடத்திட, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இவற்றுக்கான அறிவிப்பு, இம்மாதம் மூன்றாவது வாரம் வெளியாக உள்ளது.