சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தின் தெற்கு, தென் மேற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில், வெப்ப சலன மழை அவ்வப்போது பெய்கிறது.
இன்று, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கரூர், விருதுநகர், மதுரை மற்றும் சேலம் ஆகிய, 13 மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.சில இடங்களில், இடி, மின்னலுக்கும் வாய்ப்புள்ளது. நேற்று அதிகபட்சமாக, தென்காசியில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.