சென்னை, திருவான்மியூர் மார்க்கெட் பகுதியை, நேற்று அவர் ஆய்வு செய்தார். அதேபோல, சூளை, தட்டாங்குளத்தில் ஆய்வு செய்த பின், துாய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
ஒத்துழைப்பு அவசியம்
அதேபோல,
மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ், கொரோனா நோயாளிகள் தங்கியுள்ள,
நுங்கம்பாக்கம் தனியார் கல்லுாரியில் ஆய்வு செய்தார்.அதன்பின், மாநகராட்சி
அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரி, ராதாகிருஷ்ணன்
கூறியதாவது: சென்னையில், கொரோனாவை கட்டுப்படுத்த, தீவிர களப் பணியில்,
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதல், துாய்மை பணியாளர்கள் வரை ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு, பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
சென்னையில்,
தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை,
கோடம்பாக்கம், வளசரவாக்கம் பகுதிகளில், பாதிப்பு அதிகமாக உள்ளது. சூளை,
தட்டாங்குளத்தில், 96 பேருக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது, புதிதாக யாரும் பாதிக்கப்படாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அச்சம் வேண்டாம்
தமிழகத்தில்
இறப்பு விகிதம், 0.8 சதவீதமாகவும், சென்னையில், 0.9 சதவீதமாகவும் தான்
உள்ளது. 99.1 சதவீதம் பேர் குணமடைந்து வருகின்றனர். இதனால், பொது மக்கள்
தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம்; எனினும், கவனக் குறைவாகவும் இருக்க கூடாது.
வீட்டில் இருக்கும் முதியவர்கள், நீரிழிவு, ரத்தம் அழுத்தம் உள்ளவர்களை, குடும்பத்தினர் தனி கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். அவர்கள், வெளியே செல்வதை தடுக்க வேண்டும்.சளி, காய்ச்சல் இருப்பவர்கள் சிலர், மருத்துவமனைக்கு வர தயங்குகின்றனர். அலட்சியம் காட்டாமல், அரசு மருத்துவமனையில், உரிய சிகிச்சை பெற வேண்டும்.

அறிகுறி
அதேபோல்,
சாதாரண பிரச்னைகளுக்கு, மருத்துவமனைக்கு வருவதையும் தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனை வாயிலாகவும், தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அறிகுறி
இல்லாதவர்கள், மருத்துவமனைகளில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு
வருகின்றனர். அவர்களுக்கு, மூலிகை டீ வழங்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து, வெளிமாவட்டங்களுக்கு சென்ற, 6,900 வியாபாரிகளும் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனை
சென்னையில்,
1,300 காய்கறி வியாபாரிகள் உள்ளனர். அனைத்து வகை வியாபாரிகளையும்
தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வெளி மாநிலங்களில் இருந்து வரும்
வியாபாரிகளும், தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின், அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், மாநகராட்சி, சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் போலீசார், துாய்மை பணியாளர்கள், காலை, 6:00 மணி முதல் கடுமையான உழைப்பை அளித்து வருகின்றனர். இவர்களின் உழைப்பு காரணமாக, சென்னையில், கொரோனா குறித்து, விரைவில் நல்ல செய்தி வரும். இவ்வாறு, அவர் கூறினார்.