
வோடபோன்
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது இருமடங்கு டேட்டா சலுகையை
மீண்டும் அறிவித்துள்ளது. முன்னதாக மார்ச் மாத வாக்கில் தேர்வு செய்யப்பட்ட
சில வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்ட இந்த சலுகையில் பல்வேறு
மாற்றங்கள் செய்யப்பட்டன.
நாடு முழுக்க அனைத்து
வட்டாரங்களில் உள்ள வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்கள் ரூ. 299, ரூ.
449 மற்றும் ரூ. 699 விலை சலுகைகளில் தற்சமயம் கூடுதல் டேட்டா பெற
முடியும். ரூ. 399 மற்றும் ரூ. 599 பிரீபெயிட் சலுகைகள் தேர்வு செய்யப்பட்ட
வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.
மேம்பட்ட
புதிய அறிவிப்பின் படி வோடபோன் இந்தியா வலைதளத்தில் ரூ. 299, ரூ. 449
மற்றும் ரூ. 699 பிரீபெயிட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்கப்படுவதாக
குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று ஐடியா வலைதளத்திலும் இருமடங்கு டேட்டா
வழங்கப்படுகிறது.

முன்னதாக
இருமடங்கு சலுகை டெல்லி, மத்திய பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு
வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் என ஒன்பது
வட்டாரங்களில் மட்டும் வழங்கப்பட்டது.
பலன்களை
பொருத்தவரை ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் சலுகைகளில்
வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
இவற்றின் வேலிடிட்டி மாறுபடுகிறது. ரூ. 299 சலுகையில் 28 நாட்களும், ரூ.
449 சலுகையில் 56 நாட்களும், ரூ. 699 சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி
வழங்கப்படுகிறது.
மூன்று சலுகையிலும்
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை
வழங்கப்படுகிறது. இத்துடன் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் பிளே
மற்றும் ஜீ5 சந்தாவும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஐடியா மூவிஸ் மற்றும்
டிவி ஆப் சந்தா வழங்கப்படுகிறது.