சென்னை; தமிழகத்தில், நேற்று புதிய உச்சமாக, ஒரே நாளில், 3,940 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுதும், 82 ஆயிரத்து, 275 பேர் பாதிக்கப்பட்டு, 35 ஆயிரத்து, 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒன்றரை வயது ஆண் குழந்தை உட்பட, 1,079 பேர், இதுவரை இறந்துள்ளனர்.இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 90 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
அவற்றில்,
நேற்று மட்டும், 32 ஆயிரத்து, 948 பேருக்கு நடந்த பரிசோதனையில், 3,940
பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில், வெளி மாநிலம் மற்றும்
வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள், 179 பேர். சென்னையில், 1,992 பேர்;
செங்கல்பட்டில், 183 பேர்; கள்ளக்குறிச்சியில், 124 பேர்; மதுரையில், 284
பேர்; திருவண்ணாமலையில், 114 பேர்; திருவள்ளூரில், 99 பேர் பாதிக்கப்பட்டு
உள்ளனர்.கரூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களை தவிர்த்து, அனைத்து
மாவட்டங்களிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.மாநிலம் முழுதும், 82 ஆயிரத்து, 275 பேர் பாதிக்கப்பட்டு, 35 ஆயிரத்து, 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒன்றரை வயது ஆண் குழந்தை உட்பட, 1,079 பேர், இதுவரை இறந்துள்ளனர்.இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 90 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
சென்னையில், 809 பேர்; செங்கல்பட்டில், 80 பேர்; மதுரையில், 25 பேர்; காஞ்சிபுரத்தில், 19 பேர்; திருவள்ளூரில், 61 பேர்; விழுப்புரத்தில், 12 பேர் இறந்துஉள்ளனர். மற்ற மாவட்டங்களில், 10க்கும் குறைவான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.







