கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இம்மாதம் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் மாநிலம் முழுவதும், எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, முதல் ஞாயிறான கடந்த 5ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், இம்மாதத்தின் இரண்டாவது ஞாயிறான நாளை, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளான பால் கடைகள், மருந்தகங்கள் மட்டுமே நாளை இயங்கும்.
காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும்.
இதேபோல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.









