பிளஸ்
2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், வரும், 25ம் தேதி முதல்
வழங்கப்படும்' என, தேர்வு துறை இயக்குனர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 2
மற்றும், பிளஸ் 1 அரியர் தேர்வு முடிவுகள், ஜூலை, 16ல் வெளியிடப்பட்டன.
தலைமை ஆசிரியர்கள், வரும், 24ம் தேதி முதல், மாணவர்களின் மதிப்பெண்
பட்டியலை பதிவிறக்கம் செய்து வைக்கலாம். மதிப்பெண் பட்டியலை சரிபார்த்து,
தலைமை ஆசிரியர்கள், பள்ளியின் முத்திரையிட்டு, கையெழுத்திட்டு,
மாணவர்களுக்கு வினியோகிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, தேர்வு மைய தலைமை
ஆசிரியர்கள் கையொப்பமிட்டு, முத்திரையிட்டு வழங்க வேண்டும். 25ம் தேதி
முதல், 30ம் தேதி வரை, ஒவ்வொரு பள்ளியிலும், தலைமை ஆசிரியர்கள் வழியே,
மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.