ஐடிஐ
தேர்ச்சி பெற்றவர்கள் skilled Assistant garade II பதவிக்கும் பத்தாம்
Fitter grade II பதவிக்கும் விண்ணப்பிக்க தமிழக மருத்துவ சேவைகள்
ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
skilled
Assistant garade II பதவிக்கு மொத்தம் 87 காலிப்பணியிடங்கள் உள்ளது.
இதற்கு விண்ணபிக்க விரும்புவோர் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இவர்களுக்கான ஊதியம் 7 வது ஊதியக்குழு சம்பள அளவின் அடிப்படையில்
வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in என்ற முகவரியில்
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Fitter
grade II பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றதுடன் மோட்டார் வாகன மெக்கானிக்கல் தேசிய வர்த்தக சான்றிதழ் (NTC)
பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிப்பவர்கள் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன்
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு 7 வது ஊதியக்குழு படி நிலை
8க்கு மாதந்தோறும் ரூ.19,500 - ரூ.62,000 சம்பளம் வழங்கப்படும்.
இந்த
பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள்
விண்ணப்பித்து கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.500
மற்றும் பிற வகுப்பினருக்கு (SC/SCA/ST/DAP) ரூ.250 நெட்பேங்கிங், கார்ட்,
மொபைல் வால்ட் மற்றும் சலான் மூலமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...