சிறப்பம்சங்கள்
- உங்கள் உணவை மெதுவாகவும் ஒழுங்காகவும் மென்று சாப்பிடுங்கள்
- உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளிகளை வைக்க வேண்டாம்
- தயிர், மோர் போன்ற புரோபயாடிக் உணவுகள் அசிடிட்டியைக் குறைக்கும்
அசிடிட்டி என்பது அனைவரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை.
அதிகப்படியான உணவு, அதிகப்படியான துரித உணவைச் சாப்பிடுவது, மிக விரைவாகச்
சாப்பிடுவது மற்றும் உங்கள் உணவைச் சரியாக மென்று சாப்பிடாமல் இருப்பது
அசிடிட்டிக்கு மிகவும் பொதுவான காரணங்கள். உடற்பயிற்சியின் பற்றாக்குறை
மற்றும் குடல் ஆரோக்கியம் ஆகியவை நிலையான அசிடிட்டிக்கு பங்களிக்கும்.
உங்கள் உணவில் புரோபயாடிக்குகளை உள்ளடக்குவது, உங்கள் உணவை மெதுவாகவும்
ஒழுங்காகவும் மென்று சாப்பிடுதல் மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிர்ப்பது
இயற்கையாகவே அசிடிட்டியைக் கையாள்வதற்கான சிறந்த வழிகள்.
ஒரு
ஐஜிடிவியில், ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் இயற்கையாகவே அசிடிட்டியை
சமாளிக்கக் கூடுதல் உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார். இந்த
உதவிக்குறிப்புகள் வீக்கத்தைக் குறைக்கவும், பி.எம்.எஸ்ஸை எளிதாக்கவும்
மற்றும் வெப்பம் அல்லது அதிக வெப்பநிலையால் ஏற்படும் சோர்விலிருந்து
நிவாரணம் அளிக்கவும் உதவும்.
அசிடிட்டியைக் குறைக்க உதவும் உணவுகள்:
1. இரவு முழுவதும் ஊறவைத்த உலர் திராட்சை
காலை
எழுந்ததும், இரவு முழுவதும் ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிடுவது,
இயற்கையாகவே அசிடிட்டியை போக்கும் மற்றும் பிஎம்எஸ் அறிகுறிகளைக்
குறைக்கும். ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்திருக்கும்போது, ஒரு கிளாஸ்
தண்ணீர் குடித்து, பின்னர் இரவு முழுவதும் ஊறவைத்த திராட்சையும்
சாப்பிடுங்கள்.

2. தயிருடன் ஊறவைத்த போஹாவை சாப்பிடலாம்
கைப்பிடி
அளவு ஊறவைத்த மற்றும் வடிகட்டிய போஹாவை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய
கிண்ணத்தில் தயிர் (வீட்டில் தயாரித்த) ஒரு சிட்டிகை கருப்பு உப்பு மற்றும்
அரைத்த பச்சை மிளகாய் கொஞ்சம் சேர்க்கவும். இதை நீங்கள் காலை 11 மணிக்கு
அல்லது மாலை 6 மணிக்கு அருந்தலாம்.
Listen to the latest songs, only on JioSaavn.com
3. கல்கண்டுடன் தண்ணீர் சேர்ந்து அருந்தலாம்
இயற்கையாகவே
அசிடிட்டியைச் சமாளிக்க, நாள் முழுவதும் இந்த நீரேற்றம் மற்றும்
புத்துணர்ச்சியூட்டும் தீர்வைப் பருகவும். கல்கண்ட் என்பது சர்க்கரையுடன்,
ரோஜா இதழ்களைச் சேர்த்துச் செய்யும் பழமையான செய்முறையாகும். தண்ணீரில் 1
தேக்கரண்டி கல்கண்ட் சேர்க்கவும், உங்கள் கல்கண்ட் தண்ணீர் தயாராக உள்ளது.
நீங்கள் அசிடிட்டி மற்றும் தூக்கமின்மையை உணர்ந்தால், இரவு உணவிற்குப்
பிறகு நீங்கள் கல்கண்ட் அருந்தலாம். வேறு, நீங்கள் அதை எந்த நேரத்திலும்
அருந்தலாம்.