சென்னை; ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற, பார்வைத் திறன்
குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, முதல்வர் பாராட்டு தெரிவித்து,
நினைவுப் பரிசு வழங்கினார்.
கடந்த ஆண்டு, இந்திய குடிமைப் பணிகள் தேர்வில், பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளான, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பூரணசுந்தரி, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, பாலநாகேந்திரன் ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். அவர்களைப் பாராட்டி, சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று முதல்வர் இ.பி.எஸ்., நினைவுப் பரிசு வழங்கினார்.
'அரசு நலத் திட்டங்களை, மக்களிடம் சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில், சிறப்பான முறையில், பணியாற்ற வேண்டும்' என, அவர்களிடம், முதல்வர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலர் சண்முகம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலர் விஜயராஜ்குமார் பங்கேற்றனர்.