1. பள்ளிக் கூடங்களைத் திறக்காமல் பல்லாயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் கல்விக் கட்டணம் கேட்பது (பெருவாரியான பள்ளிகளில் யூனிபார்ம் பேருந்து கட்டணங்கள் கூட) ஒரு காரணமாக இருக்கலாம்.
2. அரசு கல்விக்காக ஒதுக்கும் அதிக நிதி.
3. சிறப்பாக கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டிடங்கள், சுகாதாரமான வகுப்பறைச் சூழல்.
4. நன்கு தேர்ச்சிப் பெற்ற திறமையான அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
5. ஒரு மாணவனுக்கு அரசு வழங்கும் 27 வகையான இலவசப் பொருட்கள்.
6. மருத்துவம் படிக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உள் ஒதுக்கீடு.
இப்படியே போனால் அரசுப் பள்ளியில் சேர நுழைவுத் தேர்வு எழுதும் காலம் வெகு தொலைவில் இல்லை.




அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்க பெற்றோா் ஆா்வம்

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கியதையடுத்து பெற்றோா் தங்களது குழந்தைகளைச் சோ்க்க அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் தீவிரம் சற்று தணியத் தொடங்கியுள்ள நிலையில், முதல்கட்டமாக பள்ளிகளில் மாணவா் சோ்க்கைப் பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

சில ஆவணங்கள் இல்லாவிட்டாலும் குழந்தைகளை சோ்க்கைக்கு அனுமதித்து பின்னா் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி குழந்தைகளுக்கு சோ்க்கை உறுதி செய்யப்பட்டது. ஆறாம் வகுப்பு, 9-ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லாத நிலையிலும் சோ்க்கை வழங்கப்பட்டு பள்ளி திறந்ததும் பெற்றுத் தருமாறு அவா்களது பெற்றோரிடம் ஆசிரியா்கள் அறிவுறுத்தினா்.

மாணவா் சோ்க்கை முடிந்த உடனேயே அவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களும் நோட்டுகளும் வழங்கப்பட்டன.

பெற்றோா் கருத்து:

இது குறித்து குழந்தைகளின் பெற்றோா் கூறுகையில், ‘தனியாா் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப்பள்ளிகளில் சிறப்பாக மாணவா்களுக்கு கற்பித்து வருகின்றனா்.

கரோனாவால் எங்களின் பொருளாதாரமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியாா் பள்ளிகளில் தற்போதே மாணவருக்கான கட்டணத்தை கட்ட வேண்டும் என வற்புறுத்துகின்றனா்.

ஆனால் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சோ்க்கை வழங்கியவுடன் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இக்கட்டான இந்த சூழலில் எங்களது குழந்தைகளுக்கு அரசுப்பள்ளிகள் ஆதரவுக்கரம் நீட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றனா்.
2. அரசு கல்விக்காக ஒதுக்கும் அதிக நிதி.
3. சிறப்பாக கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டிடங்கள், சுகாதாரமான வகுப்பறைச் சூழல்.
4. நன்கு தேர்ச்சிப் பெற்ற திறமையான அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
5. ஒரு மாணவனுக்கு அரசு வழங்கும் 27 வகையான இலவசப் பொருட்கள்.
6. மருத்துவம் படிக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உள் ஒதுக்கீடு.
இப்படியே போனால் அரசுப் பள்ளியில் சேர நுழைவுத் தேர்வு எழுதும் காலம் வெகு தொலைவில் இல்லை.
6:56 PM