மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக தேர்வில் கேரளா
மையங்கள் விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தள்ளது.
பிப்ரவரியில் நடந்த தேர்வில் கேரளாவில் உள்ள மூன்று மையங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் விடைத்தாள்களை பல்கலை ஊழியர்கள் உதவியுடன் திருத்தும் முகாமில் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள் களுடன் கலந்து மைய பொறுப்பாளர்கள் முறைகேடு செய்தது தெரிய வந்துள்ளது.
இதற்காக மாணவர்களிடம் மைய
பொறுப்பாளர்களால் தலா ரூ.50 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சில மாணவர்கள்
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற பணம் கொடுத்ததும் தெரிந்துள்ளது. பதிவாளர்
(பொறுப்பு) வசந்தா கூறுகையில் "இந்த முறைகேட்டில் ஊழியர் சிலருக்கு தொடர்பு
உள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்த குழு
அமைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
என்றார்.பிப்ரவரியில் நடந்த தேர்வில் கேரளாவில் உள்ள மூன்று மையங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் விடைத்தாள்களை பல்கலை ஊழியர்கள் உதவியுடன் திருத்தும் முகாமில் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள் களுடன் கலந்து மைய பொறுப்பாளர்கள் முறைகேடு செய்தது தெரிய வந்துள்ளது.
தொடரும் சர்ச்சை
சில
நாட்களுக்கு முன் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மாணவர் ஒருவருக்கு அதிக
மதிப்பெண் வழங்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. மதிப்பெண் வழங்கிய
ஆசிரியர், 'பல்கலை அதிகாரிகள் சிலர் கூறியதால் தான் வழங்கியதாக'
தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் விடைத்தாள் முறைகேடு சம்பவம்
நடந்துள்ளது.








