"க்ளுட்டமைன்" என்பது நமது உடலில் இயற்கையாக இருக்கும் ஒரு அமினோ அமிலம் ஆகும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் வெளிப்புற உணவுகள் மூலம் நாம் அதனை எடுத்து கொள்ளவேண்டிய நிலை ஏற்படும். ஆரோக்கியமான வாழ்விற்கு க்ளுட்டமைன் பற்றி தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
க்ளுட்டமைன் என்பது நமது உடலில் சுரக்கும் அத்தியாவசியமான அமிலம் ஆகும். இது பொதுவாக நமது உடலில் இருக்கும் புரதங்களின் தொகுப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனை பொதுவாக L-க்ளுட்டமைன் என்று அழைப்பார்கள். இது இயற்கையாக சுரந்தாலும் அதீத மனஅழுத்தம், காயங்கள் குணப்படுத்தும் நேரம் போன்ற தருணங்களில் இது அதிகம் தேவைப்படும். இதுபோன்ற சில உணவுகளின் மூலம் இந்த அமினோ அமிலத்தை நீங்கள் பெறலாம்.
க்ளுட்டமைன் பவுடர்..க்ளுட்டமைன் என்பது நமது உடலில் சுரக்கும் அத்தியாவசியமான அமிலம் ஆகும். இது பொதுவாக நமது உடலில் இருக்கும் புரதங்களின் தொகுப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனை பொதுவாக L-க்ளுட்டமைன் என்று அழைப்பார்கள். இது இயற்கையாக சுரந்தாலும் அதீத மனஅழுத்தம், காயங்கள் குணப்படுத்தும் நேரம் போன்ற தருணங்களில் இது அதிகம் தேவைப்படும். இதுபோன்ற சில உணவுகளின் மூலம் இந்த அமினோ அமிலத்தை நீங்கள் பெறலாம்.
பொதுவாக க்ளுட்டமைன் பவுடர் வடிவத்தில் கிடைக்கிறது. விளையாட்டு வீரர்களும், உடற்பயிற்சி செய்பவர்களும் இதனை அதிகம் பயன்படுத்துவார்கள். இது திசுக்களை பாதுகாக்கவும், அவற்றை வலுப்படுத்தவும் உதவுகிறது. இதனை தாராளமாக அனைவரும் பயன்படுத்தலாம் ஆனால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். க்ளுட்டமைன் எந்த குறைபாடுகளை எல்லாம் சரிசெய்யும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
இரைப்பை கோளாறுகள்..
நீங்கள் வயிறு தொடர்பான ஏதாவது பிரச்சினைகளில் இருந்தால் வயிறு வலி முதல் மோசமான வயிற்றுப்போக்கு வரை எதுவாக இருந்தாலும் வயிறு ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் க்ளுட்டமைன் அதற்கு உதவலாம். சிறுகுடலில் இருக்கும் திசுக்கள் வேலை செய்வதற்கு இதுதான் எரிபொருள் ஆகும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதன் பாதைகளை சீரமைக்கவும் இது முக்கியமான தேவை ஆகும்.
அல்சர்..
அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் க்ளுட்டமைன் எடுத்துக்கொள்வது நல்லதாகும். உங்களின் உணவுப்பாதை சேதமடைவதே இந்த பிரச்சினை ஏற்பட காரணமாகும். இந்த அமினோ அமிலம் சேதமடைந்த இந்த செல்களை சரிசெய்கிறது.
தசை வளர்ச்சி..
புரோட்டின் உயிரிவழித் தொகுப்பில் முக்கியமான ஒன்றாக இருக்கும் இது கூடுதல் செல்கள் மற்றும் திசுக்களை உருவாக்குவதுடன் உங்கள் பலத்தையும் கூட்டுகிறது. இதனால் இது உடலை கட்டமைக்கும் பலரால் பயன்படுத்தப்படுகிறது.
பொறுதிறன்..
நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் உங்கள் உடலில் இருக்கும் க்ளுட்டமைன் தொடர்ந்து வெளியேறி கொண்டே இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஏற்படும் ஆற்றல் இழப்பை சரிசெய்ய க்ளுட்டமைன் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆய்வுகளின் படி இந்த பொருள் உங்கள் தசைகள் பலவீனமடையமால் பாதுக்கப்பதாக கூறுகிறது.
எடை பராமரிப்பு..
மனித வளர்ச்சி ஹார்மோன் (HGH) அளவிற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிப்பதன் மூலம், உடலின் வளர்சிதை மாற்றமானது அதிகரிப்பதுடன் இது அதிகளவு கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்க பயன்படுகிறது. மேலும் அதிக உணவு உண்பதையும் தடுக்கிறது.
க்ளுட்டமைன் உணவுகள்..
உங்கள் உடலிலேயே க்ளுட்டமைன் சுரக்கும் ஆனால் சில உணவுகளின் மூலமும் நீங்கள் க்ளுட்டமைன் அமினோ அமிலத்தை பெறலாம். அவை முறையே முட்டைகோஸ், அஸ்பாரகஸ், ப்ரோக்கோலி, எலும்பு சூப், பால் பொருட்கள், பாலாடை போன்றவற்றில் இந்த அமினோ அமிலம் அதிகமிருக்கிறது.
பகிர்வு
🧡💙🧡💙🧡💙🧡💙🧡💙🧡💙🧡