பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொறியியல்
கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களது சான்றிதழ்களை
இணையதளத்தில் பதவியேற்றம் செய்ய நேற்று கடைசி நாள் என
அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான
கால அவகாசம், வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, தமிழ்நாடு
பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.
இதனால், இன்று வெளியிடப்படவிருந்த சமவாய்ப்பு எண்களும், வேறொரு தேதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.