
சிவகாசி : கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில்,
சிவகாசியில் சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான நோட்டுகள் தேக்கமடைந்துள்ளன.
இதனால், தயாரிப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியில் 100க்கும் மேற்பட்ட பாடநோட்டு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.
இவைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து
வருகின்றனர். ஆண்டுதோறும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நோட்டு,
புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமில்லாமால் வெளி
மாநிலங்களுக்கும் சுமார் 70 சதவீதம் விற்கப்படுவது வழக்கம்.கொரானா காரணமாக அனைத்தும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.