இன்றைய சிந்தனை ( 21.08.20 )
............................................................
''உதவும் மனப்பான்மை...!
.....................................................
ஒருவரை ஒருவர் தாங்கி ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் வாழ்வு உன்னதமானது, உதவும் பண்பு வளர்ந்தோங்கிவிட்டால் தன்நலம், பேராசை, திருட்டுத் தனம், போன்ற தீய பண்புகள் இல்லாமல் போய்விடும்...
வெயிலின் ஒளி எந்தப் பொருள் மீது பட்டாலும் அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றும் என்றான் ஆங்கிலப் பெருங் கவிஞன் ஷெல்லி...
அதேபோல் தூய அன்புடன் பிறருக்கு நாம் கொடுக்கிற எந்தப் பொருளும் அதி உன்னத மதிப்புடையதாகவே கருதப்படும்...
தேவைப்படுகிற உதவி கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க வேண்டும். அதுதான் பெறுகிறவர்களுக்குப் பேருதவி, தருகிறவர்களுக்கும் பெருமை...!
சிறிய உதவியோ பெரிய உதவியோ மனமுவந்து செய்யவேண்டும். அதற்கு மிகப்பெரிய பலன் உண்டு, உதவுகின்ற உள்ளங்கள் இருக்கின்ற இடங்கள் எவையோ அவையே உன்னதமான பூமி.
அதனால்தான்!,
உடல் நோயற்று இருப்பது முதல் இன்பம்,
மனம் கவலையற்று இருப்பது இரண்டாம் இன்பம்,
பிற உயிர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம் - என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்...
ஆனால்!, மனிதன் காலப்போக்கில் மனிதநேயம் மறந்து, பொருட்களின்மீது நாட்டம்கொண்டு மனிதன் மனிதனாக வாழ மறந்து வருகிறான்...
பொருட்கள் நிரந்தரம் அல்ல, மனித வாழ்வும் நிரந்தரம் அல்ல. நாம் பெரும் நற்பெயர், நல்ல சந்ததி இவை யாவும் தொடர்ந்து நிலைக்கும்...
நீங்கள் வாழும் காலம் அனைவருக்கும் உதவி செய்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். மகிழ்ச்சியில் மிகப்பெரிய மகிழ்ச்சி மற்றவரை ஆனந்தப் படுத்தி பார்ப்பதுதான்.
ஆம்!, நம்மை நாடியவருக்குஉதவும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்...
அறிவு வளர்ச்சி இல்லாதவர்களுக்கு எந்தவித ஆதாயம் பாராமல் உதவ வேண்டும். ஆதரவு இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும்
ஆறுதல் அளிக்கும்படி இயன்ற அளவு உதவ வேண்டும்...!
மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒதுக்கப்பட்டவர்களுக்கு
உள்ளுணர்வோடு, ஒருமனதோடு உதவ வேண்டும்...!
கல்லாதவர்களுக்கும், நம்மை நாடி வந்தவருக்கு
கள்ளமில்லாமல், நல்லுணர்வு காட்ட வேண்டும்...!
தன்னை உணராதவருக்கும், மனதால் பாதிக்கப்பட்டவர்க்கும், முழு மனதோடு தன்னலமில்லாமல் பரிவு காட்ட வேண்டும்...!
ஆம் நண்பர்களே...!
மனிதனுக்கு மனிதன் உதவி செய்வது எவ்வளவு அவசியமோ, அதேபோல் ஒட்டு மொத்த சமூக நலனுக்காக நாம் உதவி புரிவதும் மிக அவசியம்...!
உதவும் மனப்பான்மை பெருகப் பெருக மனிதநேயமும் மனித சமூகமும் செழிப்படையும்; உலகம் சீர்பெறும்...!!