I.A.S. தேர்வில்சாதனை படைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 4 August 2020

I.A.S. தேர்வில்சாதனை படைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி.


குடியுரிமை பணித்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள மதுரையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவிக்கு குவியும் பாராட்டு.... தடைக்கல்லை படிக்கற்கலாக மாற்றி சாதித்த மாணவி.

நாட்டின் உயரிய பணியாகக் கருதப்படும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 829 பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை சிம்மக்கல் மணி நகரம் பகுதியை சேர்ந்த முருகேசன் - ஆவுடைதேவி தம்பதியினரின் மகள் பூரண சுந்தரி. 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை இழந்த பூரண சுந்தரி தன்னம்பிக்கையை சற்றும் இழக்காமல் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவியாக தேர்ச்சி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 10ம் வகுப்பில் 471 மதிப்பெண்ணும் 12ம் வகுப்பில் 1092 மதிப்பெண்ணும் பெற்றும் சாதனை படைத்துள்ள இவர் ஆங்கில இளங்கலை இலக்கியம் பயின்றுள்ளார்.

தந்தை மார்க்கெட்டிங் பணி செய்து பல்வேறு பொருளாதார நெருக்கடியில் தன்னை படிக்க வைத்த வறுமையை எண்ணி தான் நன்றாக படித்து நல்ல அரசு வேலையை பெறவேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த 2016 முதல் குரூப் தேர்வு, வங்கி போட்டி தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20 க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை எழுதியுள்ளார்.

தான் எழுதிய பல தேர்வுகளில் தோல்வியை தழுவினாலும் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாமல் 4வது முறையாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, இன்று வெளிவந்த தேர்வு முடிவில் 296 இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளார்.

முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வங்கி தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது பெற்றுள்ள வெற்றி மாணவி பூர்ண சுந்தரிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது.

தான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியாக இந்த வெற்றி இலக்கை அடைய எண்ணற்ற சவால்களை சந்தித்தாக கூறும் பூர்ண சுந்தரியின் வெற்றிக்குப் பின்னால் தனது பெற்றோர் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் உறுதுனையாக இருந்து ஊக்கமளித்து அவர்கள் சொன்ன விஷங்களை முறையாக ஏற்று படித்ததால் மட்டுமே தன்னால் வெற்றி பெற முடிந்தது என்றார்.

போட்டி தேர்விற்காக தான் தனியாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பயின்ற போது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகமும் சிலர் செய்த பொருளாதார உதவியும் மறக்க முடியாத ஒன்றாக தன்னுள் உள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறும் பூர்ண சுந்தரி சிறு வயது முதல் தனது அம்மா சொல்லி தரும் பாடங்களை கற்று வந்த தமக்கு போட்டி தேர்வுகளிலும் தனது அம்மா கற்றுக் கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் தனது தாய் ஆசிரியராக இருந்து தமக்கு உறுதுணையாக இருந்ததாகவும் கூறுனார்.

குடியுரிமை ஆட்சிப்பணியில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி எத்தனை தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் பாலமாக இருந்து ஏழை எளிய மக்களுக்கு உதவ உள்ளதாக கூறினார். மேலும் தன்னை போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் தாங்கள் எடுக்கும் முயற்சியை எந்த நிலையிலும் கைவிடாமல் விடாமுயற்சியோடு தொடர்ந்தால் நிச்சயம் முயற்சி கை கொடுக்கும் என்ற நம்பிக்கை விதையை விதைக்கிறார் பூர்ண சுந்தரி....  வாழ்த்துக்கள்!  மக்கள் பணியில் A.B.K.

2 comments:

  1. உங்களின் வெற்றிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....God bless you sister

    ReplyDelete
  2. தங்களின் உழைப்பிற்க்கும் பெற்றோரின்முயற்ச்சிக்கும தன்நலன் கருதாமல்சிறு வயது முதல் தங்களைபேணியதற்க்கு கிடைத்திட்ட வெற்றி நல்லமுறையில் பணியாற்ற அன்பு சகோதரனின் நெஞ்சம்நிறைந்த வாழ்த்துகள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H