மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்யும் குருபகவான் செப்டம்பர் முதல் வக்ரமடையப்போகிறார். வக்ர சனியின் பார்வையும் கிடைப்பதால் எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படும் என்று பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி: மேஷம் ராசி செவ்வாயின் வீடு. இந்த வீட்டில் இப்போது ராகு உடன் குரு இணைந்திருக்கிறார். இந்த கிரகங்களை சனிபகவான் கும்ப ராசியில் இருந்து பார்வையிடுகிறார். மேஷம் ராசி ராசி சக்கரத்தில் முதலாவது ராசி. அந்த ராசியில் கடந்த ஏப்ரல் முதலே ராகு குரு சேர்ந்திருக்க சனி பார்வை கிடைக்கிறது. இந்த கூட்டணியும் பார்வையும் அக்டோபர் வரை நீடிக்கும்.
தேவ குரு: குருபகவான் தேவர்களின் குருவாக திகழ்பவர் பிரகஸ்பதி. ஜோதிடத்தைப் பொருத்த வரை சனி, குருவுக்கு மட்டுமே ராஜ கிரகங்கத்திற்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. குரு பார்க்க கோடி நன்மை. குருவினால் குடும்பம், குழந்தைகள் தொழில் வளர்ச்சி ஏற்படும். அரசு வேலையாக இருந்தாலும் அடிமைத் தொழிலாக இருந்தாலும் சனிபகவான் தயவு நிச்சயம் தேவை. ராகு நிற்கும் ஸ்தானத்தில் வளர்ச்சியை தருவார். மேஷ ராசியில் குரு பகவான் ராகு உடன் இணைந்திருக்கும் நேரத்தில் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு நிறைய நன்மைகள் ஏற்படும்.
குரு சண்டாள யோகம்: குரு ராகு சேர்க்கை, குரு சனி சேர்க்கையோ, பார்வையோ நிகழும் போதெல்லாம் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஜாதகத்தில் ஒரு ராசியில் குருவும் ராகுவும் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று சொல்வார்கள். இப்போது மேஷம் ராசியில் ராகு பகவான் அமர்ந்துள்ளார் குரு உடன் இணைந்துள்ளார்.
மேஷம் லாப குரு: 11வது வீடு லாப ஸ்தானம். குரு பகவானின் பயணத்தால் செய்யும் தொழிலில் லாபம் வரும். மன அழுத்தம் நீங்கி தைரியம் தன்னம்பிக்கை நீங்கும். குடும்ப சூழ்நிலைகள் குதூகலமாக இருக்கும். பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குருபகவான் நிறைய லாபத்தை தரப்போகிறார். கடந்த கால சிக்கல்கள் தீரப்போகிறது. வியாழக்கிழமைகளில் அகத்தியரை வணங்கலாம் நன்மைகள் நடக்கும்.
சிம்மம்: பாக்ய ஸ்தானம் 9ஆம் வீடு. மேஷ ராசி சிம்ம ராசிக்கு பாக்ய ஸ்தானம். பாக்ய ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்யும் குரு பகவான் உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரப்போகிறார். பதவியில் முன்னேற்றமும் குடும்பத்தில் சந்தோஷமும் உண்டாகும். மிகப்பெரிய நல்ல யோகமான பலன்களை பெறப்போகிறீர்கள். வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டமும் சுபிட்சமான நிலையும் ஏற்படும்.
ஒன்பதாம் வீடு அதி அற்புதமான மாற்றங்களை தரப்போகிறது. குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனமும் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்கும்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு 7ஆம் இடம் களத்திர ஸ்தானம் நன்மையை கொடுக்கும் ஸ்தானம். திருமண பாக்கியம் கைகூடி வரும். நல்ல பலன்கள் தரும். குரு பகவானின் நேரடி பார்வை துலாம் ராசிக்கு கிடைக்கிறது. குரு பலனால் திருமணம் நடைபெறும். ஏழாம் வீட்டில் இருந்து நேரடி பார்வையால் இருப்பதால் கணவன் மனைவி பிரச்சினை தீரும் ஒற்றுமை ஏற்படும். விவாகரத்திற்கு அப்ளை செய்தவர்கள் கூட ஒன்று சேர்வார்கள். காதல் வயப்பட்டவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குரு பகவானும் ராகு பகவானும் இணைந்து உங்களுக்கு நன்மைகளையே செய்வார்கள். வேலைகளில் இருந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
தனுசு: பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் குரு பகவான் ராகு உடன் இணைந்துள்ளதால் காரிய சித்தியாகும். குருவின் அருள் பார்வை கிடைப்பதால் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை தரப்போகிறது. எடுத்த முயற்சிகள் வெற்றியில் முடியும். மனோ பலம், உடல் ஆரோக்கியம், பண பலத்தையும் தருவார். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். திருமணம், குழந்தைபேறு போன்ற சுப விசயங்கள் நடைபெறும். நினைத்த காரியம் தடைகளின்றி நிறைவேறும். பதவியில் வெகுமானம் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கு காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு யோகம் தருவார் குரு பகவான். அற்புதமான யோகத்தை தருவார்.
மீனம்: உங்களின் குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறார் குரு பகவான். ராகு உடன் இணைந்துள்ள குரு வக்ரமடையும் காலத்தில் சனி பகவானின் பார்வையும் கிடைப்பதால் குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் குடும்பத்தோடு சேருவார்கள். பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும்.
உங்கள் ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு வருவதால் பண வருமானம் அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும்.நிறைய நற்பலன்கள் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. உடல்நலக்கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். மனநிலை உடல்நிலையில் நல்ல மாறுதால் ஏற்படும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். மனதில் நிம்மதி பிறக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய ரிலீப் ஏற்படும்.
ராஜயோக பலன்: ஜோதிடத்தில் குரு முன்னோர்களின் புண்ணியத்தை குறிப்பவராக போற்றப்படுகிறார். சனி முன்னோர்களின் கர்ம பலனை குறிபவராக போற்றபடுகிறார். குரு சனி இருவரின் சேர்க்கை அல்லது பார்வை ஜீவ கர்ம யோகம் என்ற நிலையை வழங்குகிறது. தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களுக்கு குரு-சனி சேர்க்கை மிகப் பெரிய முன்னேற்றத்தை அளிக்கும். இவர்களுக்கு குரு அல்லது சனி தசை நடக்கும் போது ராஜ யோகத்தின் பலன்களை அனுபவிப்பார்கள். இந்த கிரகங்களின் கூட்டணியால் நாட்டில் புதிய மாற்றங்களும் ஏற்படும். ராகு குரு கூட்டணியால் பொருளாதார நிலையில் ஸ்திரத்தன்மை இருக்கும். கும்ப ராசியில் தற்போது உள்ள சனி தனது மூன்றாம் பார்வையாக மேஷ ராசியில் உள்ள ராகு குருவை பார்க்கிறார். ராகு அதீதமான ஆசைகளை தருவார். ஜனன ஜாதகத்தில் சனி, ராகு, குரு நன்றாக இருப்பவர்களுக்கு இந்த கிரகங்களின் கூட்டணியால் பாதிப்பு அதிகம் இருக்காது.