
உயிர் இழந்த தன்னுடைய மனைவியின் முப்பதாம் நாள் அஞ்சலியை முன்னிட்டு
அவரைப் போலவே தத்ரூபமாக சிலை அமைத்து வழிபாடு செய்துள்ளார் மதுரையைச்
சேர்ந்த தொழிலதிபர்.
மதுரை பகுதியைச் சேர்ந்த சேதுராமன் என்பவர்.
தொழிலதிபரான இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் என்பவர் ஆகஸ்ட் 8 ஆம்
தேதியில் உயிரிழந்து இருக்கின்றார். இதனால், சேதுராமன் மிகுந்த மன
உளைச்சலில் தனிமையில் தவித்து உள்ளார். தனது மனைவி என்றும் தன்னுடன் இருக்க
வேண்டும் என்று பாசத்தில் அவருக்கு உருவச் சிலை வடிக்க
முடிவெடுத்துள்ளார்.
தனது வீட்டில்
சிற்பி மற்றும் ஓவியரை கொண்டு பைபர் மெட்டீரியல் மூலமாக நவீன
தொழில்நுட்பத்துடன் எப்போதும் நிரந்தரமாக இருக்கும் வகையில் தன்னுடைய
மனைவியின் உருவத்தை வடிவமைத்து இருக்கிறார்.
பிச்சைமணி அம்மாள் இருந்து 30 நாள் ஆனதை தொடர்ந்து
அவரது சிலையை வைத்து சேதுராமன் வழிபாடு செய்துள்ளார். உயிரிழந்த பெண்மணி
திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் அவர்களுடைய மாமியார் என்பது
குறிப்பிடத்தக்கது.