மாணவர்களின் மதிப்பெண் அட்டை மன அழுத்தம் தரும் அட்டையாக மாறி வருவதாக குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடி, 'மார்க்ஷீட் என்பது குடும்பத்தினருக்கு கெளரவ அட்டையாக இருக்கலாம். ஆனால் மாணவர்களுக்கு நெருக்கடி தரும் அட்டையாக அது இருக்கிறது' என்று பேசியுள்ளார்.21-ஆம் நூற்றாண்டில் பள்ளிப்படிப்பு என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நாடு முழுக்க புதிய கல்விக்கொள்கையை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றும் அனைவரும் இதனை இணைந்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை 15 லட்சம் பேர் புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளதாகவும், இந்த கருத்துகள் தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த உதவும் என்றும் மோடி கூறியுள்ளார். கடந்த 4-5 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரின் கடின உழைப்பால் தேசிய கல்விக்கொள்கை உருவாகியுள்ளதாகவும், இது முடிவல்ல, ஆரம்பம் மட்டுமே என்றும் மோடி தெரிவித்துள்ளார்.








