தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கான தேதியை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை, உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று வெளியிட்டார். கோவை மாணவி சஸ்மிதா, 199.67 கட்ஆப் மதிப்பெண் எடுத்து முதலிடத்திலும், திருவண்ணாமலை சேர்ந்த மாணவன் நவநீத கிருஷ்ணன், 199.67 கட்ஆப் மதிப்பெண் எடுத்து இரண்டாவது இடத்திலும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த காவியா, 199.5 கட்ஆப் மதிப்பெண் எடுத்து மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொறியியல் கலந்தாய்விற்கான தேதிகளையும் அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.அதன்படி சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவின் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு, அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, அக்டோபர் 8 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறுகிறது.
துணை கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறும் என்றும்,
பட்டியலின மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர், 29-ம் மற்றும் 30ம் தேதி நடைபெறும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது








