
சேமிப்பு என்பது முயன்று வருவதல்ல, இயல்பில் வருவது. இயல்பில் வர வேண்டுமெனில் சில மெனல்கெடல்கள் அவசியம். சேமிப்பிற்கான அவசியத்தையும் அதை செய்வதற்கான வழிகளையும் நிபுணர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அதன் தொகுப்பு இங்கே.
உங்கள் செலவுகளை பதிவு செய்யுங்கள்
சேம்ப்பின்
முதல் படி நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதே. அனைத்து
செலவீனங்களின் மீதும் கவனம் வையுங்கள். காபி தூள், செய்திதாள், துவங்கி
நொறுக்கு தீனிகள் என அன்றாடம் நாம் வாங்கும் அனைத்தின் மீதும் சிறிய அக்கறை
கொள்ளுங்கள். ஆன்லைனில் பொருட்களை வாங்கி குவிப்பவர் என்றால் வாங்கும்
பொருட்களின் தேவைகளின் மீது சற்று அக்கறை கொள்ளுங்கள்.
பணத்தை விடவும், அதிகம் டிஜிட்டல் பணத்தை உபயோகிப்பவர்
எனில் கணக்குகளை சரிப்பார்க்கும் வேலையில் உங்கள் சமீபத்திய வங்கி
ஸ்டேட்மென்டை தயார் நிலையில் வைத்து சரி பாருங்கள். செலவுகளை பதிவு செய்வதே
சேமிப்பின் முதல் படி
சேமிப்பிற்கான வழியை தேர்வு செய்யுங்கள்
பணத்தை சேமிக்க சிறந்த வழி இலக்கை நிர்ணயிப்பது தான். எதற்காக சேமிக்கிறீர்கள் என்ற அடிப்படை காரணத்தை சிந்தியுங்கள். வீட்டிற்க்கான மாத தவணை முதல் உங்கள் சுற்றுலாவிற்கான செலவுகள் வரை எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் எதற்காக என்ற ஓர் சிறிய புரிதல் சேமிப்பின் மீது பெரும் வெளிச்சத்தை பாய்ச்சும்.
உதாரணமாக :
சிறிய கால சேமிப்பு எனில்:
1. அவசரகால நிதி(அடுத்த 3 - 9 மாதங்களுக்கான அவசரகால அடிப்படை செலுவுக்கென ஒதுக்குதல்)
2. சுற்றுலா
3. கார் அல்லது இதர சொத்துக்கள் வாங்க முதல் கட்ட தொகை செலுத்துதல்
நீண்ட கால சேமிப்பு எனில்:
1. ஓய்வு காலத்திற்க்கு பின்னான செலவுகள்
2. குழந்தைகளின் படிப்பு
3. வீடு அல்லது தொழில் துவங்குதல் போன்றவை
சேமிப்பை தானாக இயங்கும் முறையில் இணைத்திடுங்கள்
ஏரத்தாள அனைத்து வங்கிகளும் தானாக இயங்கும் "ஆட்டோமெடிக் ட்ரான்ஸ்பர்" வசதியை கொண்டுள்ளன. எப்போது எவ்வளவு தொகை எந்த வங்கி கணக்கிற்க்கு செல்ல வேண்டும் என்பதை மாத்திரம் முன்கூட்டியே நிர்ணயித்து அமைத்துவிட்டால். சேமிப்பு குறித்த பிரஞ்ஞையே இன்றி மாதாமாதம் அந்நாளில் தானாகவே அந்த சேமிப்பு நிகழும். மாதத்தின் முதலில் இது போன்ற சேமிப்பு நிகழ்ந்த விட்டால் மீதமிருக்கும் பணத்தில் செலவினை செய்ய முற்படும் போது ஓரளவு செலவீனங்கள் கட்டுக்குள் வர பெரும் வாய்ப்பு உண்டு.