ஓசூர்: ''தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு, சிறப்பு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்,'' என, பா.ஜ., மாநில செயலாளர் கார்த்தியாயினி கூறினார்.ஓசூரில் நடந்த, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: பிரதமர் மோடி, அனைத்து மாநிலங்களிலும் புதிய கல்வி கொள்கை நடைமுறை படுத்தப்படும் என கூறியுள்ளார். 'நீட்' தேர்வு செல்லும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது, மிகவும் சோகமான நிகழ்வு. சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து, ஆளும் கட்சியினர், நிவாரணத்தொகை வழங்குகின்றனர். இதற்கு பதிலாக, 'நீட்' தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு, சிறப்பு கவுன்சிலிங் கொடுக்கலாம். இந்தமுறை வாய்ப்பை இழந்தால், அடுத்தமுறை நமக்கான வெற்றி வாய்ப்பு காத்து கொண்டிருக்கிறது. இந்த தோல்வி இறுதியானது அல்ல, என்ற வலிமையான எண்ணங்களையும், மன உறுதியையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தலாம். நிவாரணத்தொகை கொடுப்பதை நிறுத்தி விட்டு, கவுன்சிலிங் செய்ய பணத்தை செலவு செய்தால், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.