முட்டை பற்றி நான் அறிந்திருக்கும் செய்திகளை பகிர்கிறேன். பொறுமையாகப் படிக்கவும் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


முட்டை பற்றி நான் அறிந்திருக்கும் செய்திகளை பகிர்கிறேன். பொறுமையாகப் படிக்கவும் :

 

நாம் உண்ணும் உணவுத்தட்டில்
முக்கியமான தேவையாக இருக்கும் ஊட்டச்சத்து

புரதச்சத்து எனும் ப்ரோட்டீன்கள்

அனைத்து ஹெல்த் ட்ரிங்க்குகளிலும் நீக்கமற நிறைந்திருப்பதாக விளம்பரம் செய்யப்படும் விசயம் "ப்ரோட்டீன்"

பவர் தரும்
எனர்ஜி தரும்
க்ரோத் ( வளர்ச்சி) தரும்
என்று விளம்பரம் செய்யப்படும் அத்தனை நல்ல விசயங்களுக்கும் பொருத்தமானது

ப்ரோட்டீன்

இத்தகைய ப்ரோட்டீனை உணவில் எப்படி எளிதாக அடைவது ???

இத்தகைய ப்ரோட்டீன் தேவையை அடைய உதவும் முக்கியமான
எளிதான
எகானமியான ஒரு உணவு உண்டெனில்
அது

"முட்டை" தான்

புரதச்சத்தை உருவாக்கும் அடிப்படை மூலக்கூறுகளாக இருப்பவை
"அமினோ அமிலங்கள்"

இதுவரை நம்மால் இருபது அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன
இவற்றுள்

ஹிஸ்டிடின்
ஐசோலியூசின்
லியூசின்
லைசின்
மெதியோனின்
ஃபினைல் அலனைன்
த்ரியோனின்
ட்ரிப்டோஃபேன்
வேலைன்

ஆகிய மேற்சொன்ன ஒன்பது அமினோ அமிலங்கள் தவிர ஏனைய பதினொன்று அமினோ அமிலங்களை நம் உடல் தானாக உற்பத்தி செய்து கொள்ளும்.

மேற்சொன்ன இந்த ஒன்பது அமினோ அமிலங்களை உணவின் மூலம் மட்டுமே மனிதன் அடைய முடியும்.

எனவே இவற்றை உணவின் மூலம் மட்டுமே பெற முடிந்த அத்தியாவசிய அமினோ அமிலங்கள் என்று அழைக்கிறோம் . ஆங்கிலத்தில் Essential amino acids.

எந்த ஒரு உணவில் இந்த ஒன்பதும் மொத்தமாக கிடைக்கிறதோ
அந்த உணவை Complete protein அதாவது நிறைவான புரதச்சத்து என்று அழைக்கிறோம்

இப்படியான ஒரு நிறைவான புரதச்சத்து நிரம்பிய உணவு தான்

"நமது முட்டை"

முட்டையில் இவையன்றி
வைட்டமின் ஏ
வைட்டமின் டி
வைட்டமின் ஈ
வைட்டமின் கே
வைட்டமின் பி2 , பி6,பி12

துத்தநாகம்
செம்பு என்று மனிதனுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன

முட்டையை வெறும் வெள்ளைக்கருவை மட்டும் உண்ணும் வழக்கம் இப்போது அதிகமாகி வருகிறது. ஆனால் அது தவறான போக்காகும்

நம் உடலுக்குத் தேவையான புரதம் முழு முட்டையில் தான் முழுமையாக வந்து சேரும்.

கொழுப்புக்கு பயந்து அஞ்சி வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டியதில்லை.
தினமும்  மூன்று முட்டைகளை
உண்பவர்களுக்கு ஆறு வாரங்கள் கழித்து ரத்தப்பரிசோதனை முடிவுகளில் இதயத்துக்கு நன்மை செய்யும் HDL எனும் அதிக அடர்த்தி கொழுப்பு புரதங்கள் அதிகம் இருக்கின்றன
மேலும் LdL எனும் ஊறு செய்யும் குறை அடர்த்தி கொழுப்பு புரதங்கள் அதிகமானது போல் தோன்றினாலும்

அவை LdL இல் உள்ள பெரிய ஊறு செய்யாத large , fluffy LDLகள் என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன

அது ஏன் என்று தெரியவில்லை
எந்த ஆய்வும் மூன்று முட்டைகளுக்கு மேல் உண்ணக்கொடுத்து செய்தமாதிரி தெரியவில்லை

ஆனால் தினமும் நான்கு முதல் பத்து முட்டைகள் வரை உண்டு ஆரோக்கியமாக வாழும் பலரை நான் அறிவேன்.

எம்மா மொரானோ எனும் இத்தாலியை சேர்ந்த பாட்டி 1899 இல் பிறந்து 2017 வரை வாழ்ந்தார்.
உலகில் முறையான பிறப்பு சான்றுகளுடன் நீண்ட நாள் வாழ்ந்த பெண்மணி அவர்.
மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.
117 ஆண்டுகள் வாழ்ந்த அவரிடம் உங்களது இந்த நீண்ட கால வாழ்க்கைக்கு உதவியது எது என்று கேட்டதற்கு

தயங்காமல் அவர் கூறிய பதில்

"முட்டைகளை சளைக்காமல் உண்டது தான் எனது நீட்சிக்குக் காரணம்" என்றார்.

நான் சராசரியாக தினமும் ஐந்து முட்டைகளை கடந்த ஐந்து வருடங்களாக எடுத்து வருகிறேன்.

முட்டைகள் எனது ஆரோக்கியத்தை மீட்டெடுத்துள்ளன.

என்னிடம் ஆலோசனை கேட்கவரும் குழந்தைகள் முதல் முதியோர் வரை
அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் எளிய புரதச்சத்துக்கான தீர்வு

முட்டைகள் தான்.

நாளொன்றுக்கு ஒருவர்
மூன்று முட்டைகளை எடுக்கலாம். ஆனால் ஒரு கண்டிசன்

கட்டாயம் அந்த முட்டைகளை தனியாக செய்து தான் சாப்பிட வேண்டும்.
முட்டை தோசை
முட்டை பரோட்டா என்று சாப்பிடக்கூடாது

ஆனால் நமக்கு பிடித்த மாதிரி
அவித்த முட்டை
ஆம்லெட்
பொடிமாஸ் என்று சாப்பிடலாம்

முட்டைகளை பச்சையாக உண்பதை நான் ஆதரிப்பதில்லை.  இது தொற்று பரவுவதையும் முட்டையில் உள்ள அலர்ஜி உருவாக்கும் அவிடின் மூலம் நமக்கு ஊறு நேரச்செய்யலாம் என்பதால் முட்டைகளை பச்சையாக உண்ணாமல் சமைத்து உண்பதே சிறந்தது

குழந்தைகளுக்கு ஆறு மாதம் முடிந்ததில் இருந்து  ஒரு முட்டையைக் கொடுத்து பழக்கலாம்.

ஒரு வயதுக்கு மேல் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் வரை அவர்கள் சாப்பிட்டாலும் தடுக்க வேண்டியதில்லை

ஈவினிங் ஸ்நாக்காக ஒரு ஆம்லெட் போட்டுக்கொடுக்கலாம்.  
இது சாக்லேட்/ பப்ஸ்/ பர்கரை விடவும் சிறந்தது.

முட்டைகளை உண்டால் பலருக்கு வாயுக்குத்து வருகிறது
அபான வாயு அடிக்கடி வெளியேறுகிறது என்று கம்ப்ளய்ண்ட் செய்வார்கள்

அதற்குத்தான் முன்பே கூறினேன்
கட்டாயம் முட்டைகளை தனி உணவாகவே உண்ண வேண்டும்.

முட்டையை சோறுடனோ
முட்டை தோசை என்றோ
முட்டை பரோட்டா என்றோ உண்ணக்கூடாது

என்னை சந்திக்கும் நீரிழிவு நோயர்களுக்கு
ஒரு வேளை உணவாக முட்டைகளை பரிந்துரை செய்து வருகிறேன்.

நான்கு முட்டைகளை முழுதாக உண்டாலும் ரத்த சர்க்கரை 200ஐ த் தாண்டாது.  
காரணம் - முட்டைகளில்  கார்போஹைட்ரேட் கிடையாது. நாம் அவற்றை குக் செய்வதற்கு சேர்க்கும் சேர்மானங்களில் மாவுச்சத்து சிறிது சேரும் அவ்வளவு தான்.

கார்போஹைட்ரேட் இல்லாத உணவுப்பொருள் மிக மிக குறைவாகவே இன்சுலின் சுரப்பை தூண்டும்.

மிக மிக குறைவாகவே ரத்த க்ளூகோஸ் அளவுகளை ஏற்றும்

நீரிழிவு நோயர்களுக்கு இதனால் மூன்று நன்மைகள்

முதல் நன்மை
ரத்த சர்க்கரை ஏறாமல் இருப்பது

இரண்டாவது நன்மை
நிறைவான புரதச்சத்து கிடைப்பது.

மூன்றாவது நன்மை
நரம்பு மண்டலத்திற்கு தேவையான வைட்டமின் பி12 கிடைப்பது.

என்னை சந்திக்கும் ஏழைகளுக்கும் நான் பரிந்துரைக்கும் எளிய புரதம் முட்டை தான்.

தினமும் மூன்று முட்டைகள் எடுத்தால்
போதும். அவர்களுக்கு வேறு ஹெல்த் ட்ரிங்குகளின் அவசியம் ஏற்படுவதில்லை

ஏழை மக்களுக்கான பேலியோ வாழ்வியலை
முட்டையை மட்டுமே பிரதானமாக வைத்து அமைக்கிறேன். அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறேன்.

நாட்டுக்கோழி முட்டையா?
ப்ராய்லர் கோழி முட்டையா?
வாத்து முட்டையா?

என்று கேட்டால் எனது பதில்
பறவை இனம் இடும் எந்த முட்டையும் சரி தான்.

காசுக்கு ஏற்றவாறு பேங்க் பேலன்சுக்கு ஏற்றவாறும்

நாம் இருக்கும் இடத்தில் கிடைப்பதைப்பொறுத்து
 நாட்டுக்கோழியா? ப்ராய்லர் கோழியா? என்பதை அமைத்துக்கொள்ளலாம்

எனது வருமானத்துக்கு ஏற்ற தரமான முட்டை
நாமக்கல் லேயர் கோழி முட்டைகள் தான்.

அந்த முட்டைகள் மீதும் ப்ராய்லர் கறி மீதும் வரம்பு மீறி அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஓரளவுக்கு மேல் அவற்றுக்கு மகத்துவம் இல்லை.

தமிழக அரசின் மெச்சத்தக்க நடவடிக்கைகளில் ஒன்று பள்ளிகளில் வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டையும்
அங்கன்வாடிகளிலும் மழலைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் முட்டையை இலவசமாக வழங்கிவருவதும் என்னைக் கவர்ந்தவை.  

தமிழகத்தில் நாட்டின் சராசரியை விட  ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரண விகிதமும் சிசு மரணமும் குறைவாக இருப்பதற்கு இந்த முட்டைகள் இலவசமாக வழங்கும் திட்டமும் முக்கிய காரணமாக இருக்கக்கூடும்

என்னைப் பொறுத்தவரை எனது தேக ஆரோக்கியத்தில் முக்கியமான பங்கு முட்டைகளுக்கு உண்டு என்பதால்

முட்டைகள் மீது எனக்கு அலாதி பிரியம் உண்டு.

 Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
https://m.facebook.com/story.php?story_fbid=3534331783316639&id=100002195571900

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H