
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் பயின்ற 34 மாணவர்களுக்கு கொரோனா னாய் தோற்று உறுதியாகி இருப்பது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த மாணவர்கள் அனைவரும் ஆரம்பப் பள்ளியில் படித்த மாணவர்கள் என்பதால் பெற்றோர்கள் முதல்கொண்டு பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கொரனோ பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட, பின் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெலகெவி மாவட்டத்தின் திம்மாபூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் 34 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்த பள்ளியில் மொத்தம் 192 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இவர்களை பல குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் 10 முதல் 15 மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பாடம் கற்று வருகின்றனர். இதில் தற்போது 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
மேலும்அந்தப் பள்ளியின் 6 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து மறுஉத்தரவு வரும் வரை, பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.