சென்னை:இன்ஜினியரிங் பொது பிரிவு கவுன்சிலிங்கில், முதல் கட்ட மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தும் அவகாசம், இன்று முடிகிறது.
பிளஸ்
2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங்
கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு படிப்பில் சேர, கவுன்சிலிங்கில் பங்கேற்க
வேண்டும். தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியாக, 'ஆன்லைனில்' இந்த
கவுன்சிலிங் நடத்தப் படுகிறது. இந்த ஆண்டு, 1.12 லட்சம் பேர்
கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில், 2,000 பேர்,
சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பொது பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங், அக்., 8ல் துவங்கியது. இதில், 1.10 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். அவர்களில், முதல் கட்ட கவுன்சிலிங்கில், 12 ஆயிரத்து, 300 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.இவர்கள், கவுன்சிலிங் கட்டணத்தை செலுத்துவதற்கு, நான்கு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அவகாசம், இன்றுடன் முடிகிறது. நாளை முதல், இரண்டு நாட்களுக்கு, ஆன்லைனில் தங்களுக்கான பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகளை, விருப்ப பட்டியலில் சேர்க்கலாம். அதன்பின், உத்தேச ஒதுக்கீடு வழங்கப்படும் என, கவுன்சிலிங் கமிட்டியினர் தெரிவித்தனர்.








