டெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜனவரி 31-ம்
தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை
கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த
பொது முடக்கத்தின் 11-ம் கட்டம் வருகிற 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில்,மத்திய
உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தற்போது நாடு முழுவதும் அன்லாக்
செயல்முறை தொடங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள்
அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அன்லாக் தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய
உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை
சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை வருகிற
2021 ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா
தொற்று தொடர்ச்சியான குறைந்தாலும், விழிப்புணர்வு, கண்காணிப்பு,
கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையை பராமரிக்க வேண்டியது அவசியம் என்றும்
மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.









