இரண்டு நாட்களுக்கு முன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
கூறிய பேட்டியில் பூஜ்ஜியம் கல்வியாண்டு வர வாய்ப்புள்ளது என்று கூறினார்
இந்த நிலையில் இன்று முதல்வருடன் ஆலோசித்த பிறகு இந்த கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் தற்போது அளித்த பேட்டியை காணும் பொழுது இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டு வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது மேலும் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்ற அறிவிப்பையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கியுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு பொதுத் தேர்வுக்கான அட்டவணைகளை கூடிய விரைவில் முதல்வருடன் ஆலோசித்த பிறகே வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்.








