உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாளை முதல் அதாவது புத்தாண்டு தொடங்கும் ஜனவரி 1ம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஆன்ட்ராய்டு, ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓஎஸ்4.0.3 புதிய ஐபோன் ஐஓஎஸ் 9 மற்றும் கேஏஐஓஎஸ் 2.5.1, ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 உள்ளிட்ட செல்போன்களில் மட்டுமே வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியும். எனவே, இந்த செல்போன்களை பயன்படுத்தும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களை வைத்திருப்பவர்கள், வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கும் செய்து, செல்போன் எண்ணை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 9 என்ற மென்பொருள் இல்லாத செல்போன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. ஐபோன் 4 உட்பட அதற்கு முன்பாக உள்ள அனைத்து ஐபோன் மாடல்களிலும் இந்த செயலி செயல்படாது. ஐபோன் 4 எஸ், ஐபோன் 5, ஐபோன் 5 எஸ், ஐபோன் 5 சி, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 எஸ் ஆகிய செல்போன்களில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து பயன்படுத்தலாம்.









