குறட்டை விட்டு தூங்குவது நிம்மதியான , ஆழ்ந்த தூக்கம் கிடையாது.தூக்கத்தில் ஏற்படக்கூடிய சுவாசக் கோளாறு இது. இந்த பிரச்சினையை சரி செய்யாமல் விட்டால், உயர் ரத்த அழுத்தம், நீரழிவு கோளாறு, இதயம் தொடர்பான பாதிப்புகள், பக்கவாதம் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
காரணங்கள்
உடல் பருமன் ,சைனஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், உள்நாக்கு அலர்ஜி, தைராய்டு கோளாறு, மூக்கடைப்பு , மூக்கின் தடுப்புசுவர் சற்று விலகி இருப்பது ,மது , புகைப்பழக்கம் , மரபியல் காரணிகள், சில பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் கால கட்டத்தில் கூட குறட்டை ஏற்படலாம்.
தீர்வு
1. தூங்கும்போது மல்லாந்து படுப்பதை தவிர்க்கவும் இடதுபக்கம் ஒருக்களித்துப் படுப்பது நல்லது.
2.தூங்கும் போது அதிக உயரமாக தலையணை வைத்துக் கொள்ளக்கூடாது.
தீர்வுக்கான உணவுமுறை
தேன்
தொற்றுக் கிருமிகளை அழிக்கும் திறன் தேனுக்கு உள்ளது . இதனால் சுவாசக்குழாய் தொண்டையில் கிருமிகளால் ஏற்படும் கோளாறை சரிசெய்து குறட்டையை குறைக்க உதவும்.
தவிர்க்க வேண்டியது
&சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கு முன் தூங்கினால் குறட்டை சத்தம் வரும் ஆகவே சாப்பிட்டவுடன் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
& இரவு நேரத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஒரு பல் பூண்டு ஒரு சின்ன வெங்காயத்தை சேர்த்து இடித்து கல்யாண முருங்கை இலைச் சாறு , துளசிச் சாறு , வெள்ளை மிளகு பொடி சேர்த்து நன்றாக கலந்து உறங்குவதற்கு அரைமணி நேரம் முன் சாப்பிட்டு வெந்நீர் குடித்து விட வேண்டும் தினமும் இதுபோல செய்தால் நாளடைவில் குறட்டை சத்தம் குறையும்.
கற்பூரவள்ளி தைலம் மூன்று சொட்டுகள் எடுத்து இதோடு சிறிது பச்சை கற்பூரம் கலந்து சுவாசித்தால் நாளடைவில் குறட்டை சத்தம் குறையும்.
தகவல்
டாக்டர். மைதிலி
ஆயுர்வேத மருத்துவர்.









