வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் வரும் 13ம் தேதி வரை மிக
கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த
மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையை ஒட்டி
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 13ம் தேதி வரை
மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில்
தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு
இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை,
மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும், மற்ற
மாவட்டங்களில் அநேக இடங்களில் மழையும் பெய்யக்கூடும்.
ஜனவரி
11ம் தேதி (நாளை) ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு
இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும். சிவகங்கை மதுரை,
புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை மற்றும்
கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில்
பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஜனவரி 12ம் தேதி
(நாளை மறுநாள்) நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தென்மாவட்டங்களில் ஒரு சில
இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஜனவரி 13ம் தேதி
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...