கொரோனா விடுமுறைக்கு பிறகு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எழும்பூரில் உள்ள பிரசிடென்ஸி மகளிர் பள்ளியில்
மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருவதாக கூறினார். மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கொரோனா அச்சத்தைப் போக்கும் விதமாக மாணவர்களுக்கு 2 நாட்கள் மனநல ஆலோசனை வழங்கப்படவுள்ளதாகவும் கண்ணப்பன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...