இதய நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சில டிப்ஸ்
இன்றைய வாழ்க்கை முறையில், இதய நோய் பாதிப்பு அதிகரித்து இருக்கிறது.
இதய நோய் ஏற்பட்டு இருந்தால், இதயத்திற்கு ஓய்வு அவசியம். நல்ல இதமான படுக்கையில், மின்விசிறிக்கு நேராக கீழே இல்லாமல், நல்ல புழுக்கம் இல்லாமல், குறைந்த வெளிச்சம் உள்ள அறையில், மன அமைதியுடன் இருப்பது முக்கியம். எந்த விஷயத்திலும் பிடிவாதம் இல்லாத மவுனம், மனதை லேசாக வைக்க உதவும்.ஆரோக்கியமாக இருப்பவர்கள், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதே நல்லது.ோம்பலும், அதிக ஓய்வும் பொது ஆரோக்கியத்தை குறைத்து விடலாம். உடல், மூளை உழைப்போ இதய நோய்க்கு காரணமாவதில்லை. மனநிலை கோளாறு, அதிர்ச்சி இவை தான் பெரும்பாலும் இதய நோய்க்கு காரணமாகிறது.இதய நோய் உள்ளவர்கள் நடமாடிக் கொண்டே இருந்தால், அதிகம் சிரமப்படுவதில்லை. வெகு நேரம் ஒரே நிலையில் நின்று கொண்டிருந்தால், சிரமம் அதிகமாகும். கை, கால்களை அசைப்பதால், இதயத்தின் தசைகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் கிடைத்துக் கொண்டே இருக்கும். இதற்கு நடைபயிற்சி உதவும். புதிது புதிதாக அதிர்ச்சியும், மனக் கோளாறும் வராத பட்சத்தில், தானாகவே இதய நோய் குணமடைந்து விடுகிறது. நுரையீரல் உபாதையும், உடலில் ரத்தக் குறைவுமே பெரும்பாலான இதய நோய்க்கு காரணம். இதயக் கோளாறுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும், நோய் கட்டுக்குள் இருக்குமே தவிர, குணமடைவதில்லை. மன நிலையும் உடல் நிலையும் பொதுவாக சீரடைந்த பின்னரே இதயம் குணமடைகிறது>வெறும் வயிற்றில் காலையிலோ, மாலையிலோ முடிந்தவரை காலாற நடப்பது இதயத்திற்கு நல்லது. உடல் உழைப்பாளியின் இதயம், சோம்பி இருப்பவனின் இதயத்தை விட, 15 ஆண்டுகளாவது இளமையாக இருக்கும். ரத்தத்தில் கொழுப்பு படிவதை, உடல் உழைப்பு குறைக்கும்; இதய நோயே வராமல் பாதுகாக்கும்.
'இந்து காந்தம் கஷாயம், பிரபாகரவடி, விதார்யாதி கஷாயம், அர்ஜுனாரிஷ்டம், ஹிருதயார்வை ரசம்' எனும் மாத்திரை போன்ற தரமான மருந்துகளை, மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வந்தால், இதயத்தை இயக்கும் வியானன் எனும் வாயுவின் சீற்றத்தை தணித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.