#இன்று #செவ்வாய்_பிரதோஷம் 🚩செவ்வாய் பிரதோஷ வழிபாட்டு சிறப்புகள் பற்றிய பதிவு🚩 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


#இன்று #செவ்வாய்_பிரதோஷம் 🚩செவ்வாய் பிரதோஷ வழிபாட்டு சிறப்புகள் பற்றிய பதிவு🚩

செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும் .
செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது .பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.

செவ்வாய் திசை நடப்பவர்கள்,செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ,விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசிரிடம் ,சித்திரை, அவிட்ட நட்காத்திரகாரர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும்.

செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும்.

இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இலை அல்லது பசும்பாலினை அபிஷேகத்திற்கு கொடுப்பதால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது

எந்த ராசி நட்சத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும் என்பது எதார்தமான உண்மையாகும்.

🌺🌺நந்தீஸ்வரர் 108 போற்றி🌺🌺

சிவாலயங்களில் பிரதோஷ காலத்தில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியை படியுங்கள்.

1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி
2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி
3. ஓம் அனுகூலனே போற்றி
4. ஓம் அருந்துணையே போற்றி
5. ஓம் அண்ணலே போற்றி

6. ஓம் அருள்வடிவே போற்றி
7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி
8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி
9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி
10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி

11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி
12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
13. ஓம் ஆதரிப்பவனே போற்றி
14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி
15. ஓம் இனியவனே போற்றி

16. ஓம் இணையிலானே போற்றி
17. ஓம் இடப உருவனே போற்றி
18. ஓம் இமயத்திருப்பவனேபோற்றி
19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி
20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி

21. ஓம் ஈர்ப்பவனே போற்றி
22. ஓம் ஈடில்லாதவனே போற்றி

23. ஓம் உத்தமனே போற்றி
24. ஓம் உபகாரனே போற்றி
25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி

26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி
27. ஓம் எளியவனே போற்றி
28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
29. ஓம் ஐயனே போற்றி
30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி

31. ஓம் கனிவுருவே போற்றி
32. ஓம் களிப்புருவே போற்றி
33. ஓம் களங்கமிலானே போற்றி
34. ஓம் கர்வம் குலைப்போனே போற்றி
35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி

36. ஓம் கயிலைக் காவலனே போற்றி
37. ஓம் கம்பீர உருவனே போற்றி
38. ஓம் குணநிதியே போற்றி
39. ஓம் குருபரனே போற்றி
40. ஓம் குறை களைவோனே போற்றி

41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி
42. ஓம் கோயில் நாயகனே போற்றி
43. ஓம் சிவபுரத்தனே போற்றி
44. ஓம் சிவதூதனே போற்றி

45. ஓம் சிவனடியானே போற்றி

46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி
47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி
48. ஓம் சிவஞான போதகனே போற்றி
49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி
50. ஓம் சிரஞ்சீவியே போற்றி

51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி
52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி
53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி
54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி
55. ஓம் ஞானியே போற்றி

56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி
57. ஓம் தருமவிடையே போற்றி
58. ஓம் தயாபரனே போற்றி
59. ஓம் தளையறுப்பவனே போற்றி
60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி

61. ஓம் தவசீலனே போற்றி
62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி
63. ஓம் தீதையழிப்பவனே போற்றி
64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி

66. ஓம் நந்தியே போற்றி
67. ஓம் நலமளிப்பவனே போற்றி
68. ஓம் நமனை வென்றவனே போற்றி
69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி
70. ஓம் நாடப்படுபவனே போற்றி

71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி
72. ஓம் நாதனே போற்றி
73. ஓம் நிமலனே போற்றி
74. ஓம் நீறணிந்தவனே போற்றி
75. ஓம் நீதி காப்பவனே போற்றி

76. ஓம் பராக்கிரமனே போற்றி
77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி
78. ஓம் பசவேசன் ஆனவனே போற்றி
79. ஓம் பகை அழிப்பவனே போற்றி
80. ஓம் பதமளிப்பவனே போற்றி

81. ஓம் பர்வதமானவனே போற்றி
82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி
83. ஓம் புண்ணியனே போற்றி
84. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி
85. ஓம் பெரியவனே போற்றி

86. ஓம் பெருமையனே போற்றி
87. ஓம் மஞ்சனே போற்றி
88. ஓம் மலநாசகனே போற்றி

89. ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி
90. ஓம் மறையே கால்களானவனே போற்றி

91. ஓம் மால்விடையே போற்றி
92. ஓம் மகாதேவனே போற்றி
93. ஓம் முனியவனே போற்றி
94. ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி
95. ஓம் யோகியே போற்றி

96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
97. ஓம் வள்ளலே போற்றி
98. ஓம் வல்லாளா போற்றி
99. ஓம் வித்தகனே போற்றி
100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி

101. ஓம் வீர உருவமே போற்றி
102. ஓம் வீரபத்திரனே போற்றி
103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி
104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி

106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி
107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி

ஓம் சிவாய நம 🙏
சர்வம் சிவமயமே
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்
அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும்
ஈசனருளால் அனைவருக்கும் இன்றைய நாள் நன்நாள் ஆகட்டும்
ஆலவாயர் அருட்பணி மன்ற தந்தையே இனிய  காலை வணக்கங்கள் 🙏

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H