தமிழக அரசுப்பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி அரசு பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி, குரூப் 1 முதல்நிலை பணியாளர்களுக்கான தேர்வுகள் கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது.
சுமார் 856 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை பணியாளர்கள் தேர்வில் 2.57 இலட்சம் பேர் தேர்வு எழுதினர். அதிகபட்சமாக சென்னையில் 150 மையங்களில் 46,965 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.