தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் அறிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினரின் கேள்வி:
இந்திய பாராளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் அவர்கள் கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் எத்தனை எம்எஸ்எம்இ.,க்கள் மூடப்பட்டுள்ளது, வேலைவாய்ப்புகள் தொடர்பான சர்வேக்கள், தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் போன்ற பல கேள்விகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் எழுத்துப் பூர்வமாக கேட்டார்.
அமைச்சரின் பதில்:
அனைத்து பாடத்திற்கும் முதுகலை ஆசிரியர் தேர்விற்கான STUDY MATERIALS AND QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவு
அமைச்சரின் இந்த கேள்விக்கு மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள், 2015- 2016ம் ஆண்டில் நடத்தப்பட்ட 73வது சுற்று தேசிய மாதிரி ஆய்வுகளின் படி, நாட்டில் மொத்தம் 633.9 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இருந்தது. இதனால் 11.10 கோடி பேர் வேலைவாய்ப்புகளை பெற்றனர். பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 2014-2015 முதல் 2020-21 வரை மொத்தத்தம் 2,28,654 பேர் வேலை வாய்ப்பை பெற்றிருக்கலாம் என்று கூறினார்.