பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது செய்முறை தேர்வு, இன்று முடிகிறது. மாணவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, மே, 5ல் பொதுத் தேர்வு நடப்பதாக இருந்தது. கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், இந்த தேர்வை அரசு தள்ளி வைத்துள்ளது.அதே நேரம், பொதுத் தேர்வுக்கு முந்தைய பொது செய்முறைத் தேர்வு திட்டமிட்ட படி, இந்த மாதம், 16ம் தேதிதுவங்கியது.









