வங்கிக்கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் ரூ.3 லட்சம் பெறலாம்! அசத்தல் திட்டம்!! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

 


YoutubeWhatsapp GroupFacebookTelegram
Click HereClick HereClick HereClick Here


 

Tuesday, 13 April 2021

வங்கிக்கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் ரூ.3 லட்சம் பெறலாம்! அசத்தல் திட்டம்!!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சிறப்பு சம்பளக் கணக்கில் ஓவர் டிராஃப்ட் வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் 3 லட்சம் ரூபாய் வரையில் பெறலாம் என்ற அசத்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு தொடங்க முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பன்னாட்டு நிறுவன ஊழியர்கள், புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

பிஎன்பி மை சேலரி அக்கவுண்ட் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சில்வர், கோல்டு, பிரீமியம் மற்றும் பிளாட்டினம். இந்த நான்கு பிரிவுகளிலும் சம்பளம் மற்றும் வாடிக்கையாளரைப் பொறுத்து ஓவர் டிராஃப்ட் வசதி வசதி கிடைக்கும் .

பிரைமரி அக்கவுண்ட் வாடிக்கையாளர்கள் தங்களது கடைசி இரண்டு மாத சம்பளத் தொகையை ஓவர் டிராஃப்ட் வசதியின் கீழ் எடுக்கலாம் . அந்தப் பணத்தை அடுத்த ஆறு மாதங்களுக்கு வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் . அதன் பிறகு மீண்டும் அவர்கள் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறலாம் .

சில்வர் சம்பளக் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ .50,000 வரையிலும் , கோல்டு சம்பளக் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ .1,50,000 வரையிலும் , பிரீமியம் சம்பளக் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ .2,25,000 வரையிலும் , பிளாட்டினம் சம்பளக் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ.3 லட்சம் வரையிலும் ஓவர் டிராப்ட் தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,000 முதல் 25,000 வரை சம்பளம் பெறுபவர்கள் சில்வர் பிரிவிலும், 25,000 முதல் 75,000 வரை பெறுபவர்கள் கோல்டு பிரிவிலும், 75,000 முதல் 1.5 லட்சம் வரை பெறுபவர்கள் பிரீமியம் பிரிவிலும், 1.50 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறுவோர் பிளாட்டினம் பிரிவிலும் வருவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. A person who works on unnammed companies staffs can not be availed this oppertunity am i right?
    We need this for every one who works as a employees.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.